Sleeping on Stomach Risks (Photo Credit: Pixabay.com)

நவம்பர் 06, சென்னை (Chennai News): மனிதனின் ஒவ்வொரு நாள் புத்துணர்ச்சி பயணத்துக்கும், முந்தைய நாள் இரவில் சிறுது ஓய்வு தேவைப்படுகிறது. உறக்கம் இல்லாத மனிதனின் மறுநாள் செயல்பாடுகள் எப்போதும் குளறுபடியாக இருக்கும். உறக்கமின்மை காரணமாக மூளை பாதிக்கப்பட்டு, அது செயல்படும் திறன் கேள்விக்குறியாகும். இதனால் செய்யும் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்படும். பலரும் உறங்கும்போது தரையில் உறங்குவார்கள். அவர்களின் வசதிக்கேற்ப எங்கு உறங்கினாலும், வயிற்றை அழுத்தியபடி குப்புற படுத்து உறங்கும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. இதனால் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். Parenting Tips: கதவை தாழிட்டு தவித்த சிறுவன்.. குழந்தை வைத்துள்ள பெற்றோர்களே கவனம்.!

வயிறு மீது அழுத்தம் கொடுத்து உறங்குவதால் ஏற்படும் தீமைகள்:

பலரும் விரைந்து உறங்கவும், குறட்டையை குறைக்கவும் இவ்வாறான முயற்சியை மேற்கொள்கின்றனர். இதனால் நாளடைவில் முதுகெலும்பில் அழுத்தம், கழுத்தில் அழுத்தம் உண்டாகும். உடல் வலி ஏற்பட்டு, பிற உடல்நல பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும். முதுகெலும்பில் உண்டாகும் அழுத்தத்தை வயிறு தாங்க தொடங்குவதால், முதுகு வளைய தொடங்கும். காலை நேரங்களில் எழும்போது அதிக முதுகு வலி இருக்கும். காலப்போக்கில் தசைகள், மூட்டுகள் சேதமாகும். நாள்பட்ட முதுகு வலி உண்டாகும். கழுத்து வலி, மூச்சு விட சிரமம் போன்ற பிரச்சனையும் ஏற்படும். நரம்புகளில் அதிக அழுத்தம் ஏற்பட தொடங்கினால் பதற்றம் உண்டாகும். உணர்வின்மை, அதிக கூச்ச உணர்வு ஏற்படலாம். கர்ப்பப்பையின் இயற்கையான சீரமைப்பு பெண்களுக்கு கேள்விக்குறியாகும். நரம்பு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கும். நுரையீரல் விரிவடையாமல் மூச்சுத்திணறல் உண்டாகும்.