Saving Schemes (Photo Credit: Pixabay)

ஜூலை 01, புதுடெல்லி (New Delhi): அண்மை காலமாக முதலீடு தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக எந்த முதலீடை தேர்வு செய்வது என்ற குழப்பமும் நிலவுகிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்களுக்கு தற்போது இருக்கும் பெரிய குழப்பம் சுகன்யா சம்ரிதி யோஜனா முதலீடு தான். பெண்களுக்கான சிறப்பான திட்டமாக சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana) திகழ்கிறது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக் கொண்டு வரப்பட்டதே இத்திட்டம்.

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: இதுவே தமிழகத்தில் செல்வ மகள் திட்டமாக (SSY) செயல்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் ரூ.1000 தொகை செலுத்தி கணக்கை துவங்கலாம். ஒரு கும்பத்திலிருந்து 2 பெண் குழந்தைகளுக்கு இத்திட்டதை உருவாக்கலாம். ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்ச தொகை 1000லிருந்து அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை செலுத்தலாம். 14 ஆண்டுகள் அல்லது குழந்தை திருமணம் ஆகும் வரை பணம் செலுத்தலாம். New Criminal Laws In India 2024: இன்று முதல் புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்.. சட்டங்கள் பற்றிய விபரம் உள்ளே..!

சரியான நாளில் தவணை செல்லுத்த தவறினால் வட்டி குறைந்துவிடும். கூடுதல் தொகை டெபாசிட் செய்தால் எப்போது வேண்டுமானாலும் திரும்பப்பெறலாம். இடையில் தவணை செலுத்தாமல் விட்டுவிட்டால் 50 ரூபாயினை அபராதம் செலுத்தி கணக்கினை மீண்டும் துவங்கலாம். இந்த சேமிப்பில் முதலீடிற்கு வரிவிலக்கு பெறலாம். 21 ஆண்டுகளுக்கு பிறகு முதிர்வு தொகை கிடைக்கும் இடையில் குழந்தைக்கு கல்வி அல்லது திருமணத்திற்கு பணம் வேண்டுமென்றால் கணக்கில் உள்ள தொகையில் 50% பெறலாம்.