ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதியின் (Vikravandi Assembly Constituency) திமுக சட்டப்பேரவை உறுப்பினர் காலமானதைத்தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழல் இருந்து வந்தது.
இடைத்தேர்தல் அறிவிப்பு விபரம்:
இந்நிலையில், தற்போது இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில், ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதாக இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India) சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜூன் 14ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
முடிவுகள் எப்போது?
அதனைத்தொடர்ந்து, வேட்பாளர் வேட்பு மனு சரிபார்ப்பு மற்றும் பரிசீலனை ஆகியவை ஜூன் 24 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 26 ஆம் தேதி வேப்பு மனுத்தாக்கலை திரும்ப பெற இறுதி நாளாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. பின் ஜூலை 10ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவுபெற்று, ஜூலை 13ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. Virudhunagar Accident: சாலையோர டீக்கடையில் ஜீப் புகுந்து 3 பேர் பலி., அரசுப்பேருந்தின் தறிகெட்டு 34 பேர் காயம்.. விருதுநகரில் நடந்த அடுத்தடுத்த துயரங்கள்.!
அரசியல் மோதல்:
திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி உடல் நலக்குறைவால் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது ஜூன் 10ம் தேதி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் திமுக. அதிமுக, பாஜக, நாம் தமிழர் ஆகிய கூட்டணி கட்சிகள் மோதிக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக செல்வாக்குப்பெற்ற தொகுதி என்பதாலும், நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளின்படியும், அங்கு வெற்றிக்காக திமுக, அதிமுக கட்சிகள் நேரடி களமோதலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரம் இன்று முதல் சூடேறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் நிலவரம்:
கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 93,730 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 84,157 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். மேலும், அமமுக சார்பில் அய்யனார், ஐஜேகே சார்பில் ஆர். செந்தில், நாம் தமிழர் சார்பில் சீபா ஆஸ்மி ஆகியோரும் களம்கண்டு இருந்தனர்.