Melmalaiyanur Angalaman Temple (Photo Credit: Facebook)

டிசம்பர் 31, மேல்மலையனூர் (Festival News): விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் (Arulmigu Angalamman Temple, Melmalayanur), மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் (Oonjal Utsavam) நேற்று (டிசம்பர் 30) நள்ளிரவில் நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இரவு 11.30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் வாத்தியங்கள், மேளதாளம் முழங்க, ஊஞ்சல் மண்டபத்தில் அங்காளம்மன் எழுந்தருளினார். Pagal Pathu 2025: வைகுண்ட ஏகாதசி 2025; பத்து நாள் கோலாகலமாக கொண்டாடப்படும் பகல்பத்து உற்சவ திருவிழா.. முழு விவரம் உள்ளே..!

ஊஞ்சல் உற்சவம்:

அங்கு விசேஷ தீபாராதனையுடன் ஊஞ்சல் தாலாட்டு துவங்கியது. கோவில் பூசாரிகளும், லட்சக் கணக்கான பக்தர்களும் அம்மன் பாடல்களையும், தாலாட்டு பாடல்களையும் பாடினர். இதனையடுத்து இரவு, 12:30 மணிக்கு, மகா தீபாராதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. கடும் பனியிலும், குளிரிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவத்தில் பங்கேற்றனர்.

மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: