மே 3, புதுடெல்லி (New Delhi): பத்திரிக்கையாளர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மக்கள் பிரதிநிதிகள் ஆகவே செயலாற்றி வருகின்றனர். இவர்களைப் போற்றுவதற்காகவும் பத்திரிக்கை சுதந்திரத்தை பரப்பும் வகையலும் உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) கொண்டாடப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் 26வது பொதுக்கூட்டத்தில் தான் பத்திரிகை சுதந்திரம் குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மூன்றாம் தேதி சர்வதேச பத்திரிகை தினம் கொண்டாட அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து 194 ஆம் ஆண்டு முதல் பத்திரிக்கை சுதந்திர தினம் அனுசரிக்கப்பட்டது.

வரலாறு: 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி அன்று, கொலம்போ பத்திரிக்கையாளர் கிலர்மோ கானோ அவர்கள் அவரது அலுவலகம் முன்பாக படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து பத்திரிக்கை சுதந்திரம் தொடர்பான பேச்சு உலகம் முழுவதும் பரவியது குறிப்பிடத்தக்கது. இவர் நினைவாக இன்னாளில் ஒவ்வொரு ஆண்டும் உலக ஊடக சுதந்திர விருது வழங்கி வருகின்றனர்.

2023 ஆம் ஆண்டு 180 நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் தொடர்பான தரவரிசை ஆய்வு நடத்தப்பட்டது. அதில் நார்வே, அயர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்தன. கடைசி மூன்று இடங்களில் வியட்நாம், சீனா, வடகொரியா உள்ளன. ஊடக சுதந்திரத்தில் இந்தியாவும் 161 வது இடத்தில் உள்ளது. Driver Provides Water to Camel: ஆளரவமில்லா பாலைவனத்தில் தண்ணீருக்காக தவித்த ஒட்டகம்; இரக்கம் காட்டிய வாகன ஓட்டி.. வைரலாகும் வீடியோ.!

இந்தியாவில் பத்திரிகை நிலை: சமீப காலமாக இந்தியாவில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், கொலைகள், சிறைபிடிப்புகள், வழக்குகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 2022 டிசம்பர் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் 363 பத்திரிகையாளர்களும் ஏழு பத்திரிகையாளர்களும் தனது கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியாவின் நான்காவது தூண் ஊடகம் என்று சொல்லப்பட்டாலும் வருடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் இறப்பது சர்வசாதாரணமாகிவிட்டது.