Driver Provides Water to Camel: ஆளரவமில்லா பாலைவனத்தில் தண்ணீருக்காக தவித்த ஒட்டகம்; இரக்கம் காட்டிய வாகன ஓட்டி.. வைரலாகும் வீடியோ.!
பாலைவனத்தில் தாகத்தால் தவித்து சாலையோரம் அமர்ந்து இருந்த ஒட்டகத்திற்கு, அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் மனிதாபிமானத்துடன் நீர் வழங்கி சென்றார்.
மே 03, சவூதி அரேபியா (Saudi Arabia): கடந்த சில மாதங்களாகவே இந்தியா மட்டுமல்லாது ஆசிய நாடுகளில் கடும் வெப்பநிலை பதிவாகி வருகிறது. கோடைகாலத்தில் தொடக்கம் முதலாக அதிகரித்து வந்த வெப்பநிலை, தற்போது 40 டிகிரியை கடந்து பதிவாகி வருகிறது. இந்தியாவின் சராசரி வெப்பநிலை என்பது 42 டிகிரியை கடந்தும் தினமும் பதிவாகுவதால், மக்கள் வெயில் சார்ந்த பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாலைவனத்தின் நடுவே தாகத்தால் பரிதவித்துக்கொண்டு இருந்த ஒட்டகம் ஒன்றுக்கு, அவ்வழியாக சென்ற வாகன ஒட்டி சாலையோரம் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நீரை வழங்கினார். கோடை வெயில் மனிதர்களை மட்டுமல்லாது விலங்குகளையும் கடுமையாக பாதித்து இருப்பது இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது. Workers Beaten by Employer: தொழிலாளிகளை சாட்டையால் அடித்து துன்புறுத்திய முதலாளி.. தொழிலாளர் தின கொண்டாட்டம் முடிவதற்குள் பரபரப்பு; அதிர்ச்சி காட்சிகள் லீக்.!
Truck driver provides water to thirsty camel in the middle of desert. pic.twitter.com/jrPNkQLwIB
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) May 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 03, 2024 09:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

