Amusement Park (Photo Credit: Pixabay)

மார்ச் 04, சென்னை (Chennai News): கோடைகாலம் என்றால், குடும்பத்துடன் குளிர்ச்சியான மலைப்பகுதிகள், டிரக்கிங்குகள் மற்றும் இரண்டு மூன்று நாட்கள் விடுமுறையை களிக்க அட்வென்சர் மற்றும் வாட்டர் தீம் பார்க்குகளையும் தேர்வு செய்வார்கள். இந்த கோடையை மகிழ்ச்சியாக குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கழிக்க உங்களுக்காக சில பொழுதுபோக்கு வாட்டர் மற்றும் ஸ்னோ பார்க்குகள் பற்றிய ஐடியாக்களை வழங்குகிறோம்.

ஸ்னோ பார்க்:

பனிப்பொழிவு என்பதை நம்மில் பலரும் பார்த்திராத ஒன்று. ஆனால் பனிப்பொழிவை நேரில் காணவும் தொட்டு உணரவும் பல ஸ்னோ பார்க்குகள் தமிழகத்தில் உள்ளது. இதை காண பனிப்பிரதேசங்களுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. ஸ்னோ பார்க்குகள் சென்றாலே பனிப்பிரதேசஙக்ளுக்கு சென்ற அனுபவம் கிடைக்கும். தமிழகத்தில் உள்ள ஸ்னோ பார்க்குகள்:

விஜிபி:

சென்னையில் உள்ள விஜிபி யுனிவர்சல் அமியூஸ்மண்ட் பார்க்கில் உள்ள ஸ்னோ கிங்டமில் உறைபனி பார்க் மக்களிடையே பிரபலமானதாகும். இதில் 45 நிமிடங்கள் ஸ்னோ பார்க்கில் களிக்கலாம். தனியாக ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ஸ்னோ பார்க்கிற்கு செல்லலாம். ஷோக்களாக நடைபெறுவதால் வெயிட்டிங் ஏரியாவில், 12டி தியேட்டர், ஹோட்டல்கள், டாட்டூ ஸ்டுடியோக்கள் என பொழுபோக்கிற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வயதிற்கு ஏற்ப 500 முதல் 1300 வரையாக டிக்கெட் விலை உள்ளது.

ஸ்னோ ஃபேண்டஸி:

கோயம்புத்தூரில் உள்ள ‘ஸ்னோ ஃபேண்டஸி’ என்னும் இண்டோர் ஸ்னோ செண்டரில் இதை தனித்தனி ஸ்ஷோக்களாக பிரித்து தேவையான் டைமில் பார்க்கும் விதத்தில் வசதிகள் உள்ளது. ஆன்லைனில் தேதி மற்றும் டைமிங்குடன் புக் செய்து டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம். இதில் லேசர், ஸ்லைடு, ஸ்னோஃபால், ஸ்னோ ரெஸ்டாரெண்ட், டிஜே, பனிப்பாலம் என பல அனுபங்களையும் பெறலாம். குழந்தைகளுக்கு ரூ.480, பெரியவர்களுக்கு ரூ.550 என வசூலிக்கப்படுகிறது. Red Light Areas In India: பாலியல் தொழிலை முதன்மை தொழிலாக கொண்டவர்கள்.. விவரம் இதோ..!

அமியூஸ்மென்ட்பார்க்:

தமிழகத்தில் பல அமியூஸ்மெண்ட் பார்க்குகள் வாட்டர் தீம் பார்க்குகளுடன் சேர்ந்தே உள்ளன. அவைகளின் சிறந்த பார்க்குகளின் லிட்ஸ்டுகள்.

குயின்ஸ்லாண்ட்:

சென்னை செம்பரமாக்கத்தில் உள்ள குயின்ஸ்லாண்ட் அமியூஸ்மண்ட் பார்க் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் செல்வதற்கு ஏற்ற பார்க்காகும். இதில் 36 ரைடுகளும், வாட்டர் கேம்களும் திகிலாகவும்,எஞ்சாய் செய்வதற்கு ஏற்றதாக இருக்கும். இந்த பார்க்கின் என்ரீ டிக்கெட் குழந்தைகளுக்கு ரூ.650 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.750.

விஜிபி:

சென்னையில் உள்ள மிகப்பெரிய அமியூஸ்மெண்ட் பார்க்காக உள்ளது விஜிபி யுனிவர்சல் கிங்டம். இதில் டிரை மற்றும் வாட்டர் ரைடுகள், சர்கஸ் மற்றும் ஷோக்கள் என அனைத்தும் வயதினருக்கும் ஏற்ற எண்டெர்டெயின்மெண்டுகள் உள்ளது. திகில் அனுபவங்களை பெற நினைப்பவர்களுக்கு ஏற்ற பொழுதுபோக்கு இடமாகும். இதன் என்ரீ விலை வயட்ஜிற்கு ஏற்ப 600 முதல்1300 வரை வயதிற்கு ஏற்ப கொடுக்கப்படுகிறது.

எம்.ஜி.எம்:

எம்ஜிஎம் தீம் பார்க்கு கடற்கரைக்கு அருகில் இருப்பதால் உயரமான ரைடுகள் செல்கையில் கடலையும் பார்க்க முடிகிறது. கூடுதலாக செய்றகை ஏரியில், போட் ரைட் செல்லும் அனுபவத்தையும் பெறலாம். இதிலுள்ள ரெஸ்டாரண்டுகள், ஸ்டால்கள், ரைடுகலின் போது எடுக்கப்படும் போட்டோக்கள் என்றும் நினைவுகளை அள்ளித்தரும். என்ரீ விலை குழந்தைகளுக்கு ரூ.549 பெரியவர்களுக்கு ரூ.699 ஆகவும் ஸ்பெஷல் பாஸ்களுக்கு கூடுதலாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

கிஷ்கிந்தா:

சென்னை தாம்பரத்தில் உள்ள இந்த கிஷ்கிந்த அமியூஸ்மெண்ட் பார்க்,ஒரு ராயல் லுக்கை தரும் பார்க்காகும். அதிகமாக பெரியவர்களுக்கான திரில் அனுபவத்தை தரும் ரைடுகளே அதிகம். நிச்சயம் நண்பர்கள் ஒரு குழுவாக செலவதற்கு இது ஏற்றதாக இருக்கும். இதன் என்ரீ விலை குழந்தைகளுக்கு ரூ.490 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.690 ஆகவும் உள்ளது.

அதிசயம்:

மதுரையில் உள்ள அதிசயம் வாட்டர் தீம் பார்க் டிரை வாட்டர் ரைடுகளில் அதிகம் வாட்டர் ரைடுகள் இருக்கும் விதத்தில் உள்ளது. மதுரையிலிருந்து 12 கி.மீ தூரத்தில் பரவையில் அமைந்துள்ளது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஏற்ற சிறிய ரைடுகளும் இருப்பதால் குடும்பமாக நேரம் செலவழிக்க இந்த பார்க் ஏற்றதாகும். இந்த தீம் பார்க்கில் பெரியவர்களுக்கு ரூ.700 ஆகவும் குழந்தைகளுக்கு ரூ.400 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

கோவைக் கொண்டாட்டம்:

கோயம்புத்தூரில் உள்ள இந்த வாட்டர் தீம் பார்க் பலருக்கும் பிடித்த தீம் பார்க்காக உள்ளது. என்ரீ விலையாக பெரியவர்களுக்கு ரூ.700 சிறியவர்களுக்கு ரூ. 600 வசூலிக்கப்படுகிறது. கோயம்புத்தூரில் இருந்து போரூர் செல்லும் வழியில் இது அமைதுள்ளது. காலையில் டிரை கேம்களையும் மதியம் மேல் வாடர் கேம்களையும் விளையாடும் விதத்தில் இருக்கும். வீக் டேஸில் மற்ற வாட்டர் தீம் பார்க்குகள் போல் அதிகளவில் கூட்டம் இல்லாமல் இருப்பதால் அனைத்து கேம்களையும் விளையாடலாம்.

பிளாக் தண்டர்:

வாட்டர் தீம் பார்க்குகள் பிடித்த தமிழக மக்கள் நிச்சயம் ஒரு முரையாது செல்ல வேண்டிய இடம் பிளாக் தண்டர். ஊட்டியுல் அமைந்துள்ள இந்த தீம் பார்கில் வாட்டர், டிரை ரைடுகள், விலங்குப் பூங்காக்கள், உணவகம், 5டி, 9டி, பஞ்சி ஜம்பிங், வலை பாலம் மற்றும் மேம்கள், காட்டுப்பயணம், இவைகளுடன் ரெசார்ட் போன்ற வசதிகளும் உள்ளது. மற்ற தீம் பார்க்குகள் போல் ஒரு நாள் எஞ்சாயிண்ட்மெண்டாக இல்லாமல் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கி ஃபன் பண்ணுவது வசதிகள் இருப்பதே இதன் சிறப்பம்சமாக இருக்கிறது. அதர்கு ஏற்றார் போல பல ஆக்டிவிட்டீஸ்கள் நிறைந்துள்ளது. பிளாக் தண்டரின் என்ரீவிலையாக பெரியவர்களுக்கு ரூ.900 மற்றும் சிறியவர்களுக்கு ரூ.790 வசூலிக்கப்படுகிறது.

சில்அவுட்:

ஈரோட்டில் உள்ள சிலவுட் தீம் பார்க்கு குழந்தைகளுக்கு ஏற்ற பார்க்காகும். 40 வாட்டர் மற்றும் 10 டிரை கேஸ்கள் உள்ளது. ஆபத்தில்லாத ரைடுகள் அதிகம் இருப்பதால் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட நினைப்பவர்கள் இங்கு செல்லலாம். இது ஈரோடு பெருந்துரை அருகில் அமைந்துள்ளது. இந்த தீம் பார்க்கில் 3 முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு ரூ.500 அகவும், 6 வயதிற்கு மேலுள்ளவர்களுக்கு 600 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.

பரவச உலகம்:

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது இந்த பரவச உலகம் வாட்டர் தீம் பார்க். அதிக திரில் தரும் வாட்டர் கேம்களையும், சற்று பயமில்லதா டிரை கேஸ்களும் உள்ளது. இந்த தீம் பார்க்கின் என்ரீ விலை பெரியவர்களுக்கு ரூ.750 ஆகவும், ரூ.600 குழந்தைகளுக்கும் வசூலிக்கப்படுகிறது. ஃப்ரெண்ட்ஸ் கேங்காக செல்ல நினைப்பவர்கள் இந்த பரவச உலக பார்க்கிற்கு செல்லலாம்.