ஆகஸ்ட் 11, கொடைக்கானல் (Dindigul News): கொடைக்கானல் போன்ற சுற்றுலாத்தலங்களுக்கு நண்பர்களுடன் செல்வோர், அங்கு மதுபானங்களை வாங்கி வைத்து போதையில் தங்களின் நாட்களை கழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதையில் நாம் செய்யும் செயல் சிலநேரம் நமக்கு எதிராக அமையும் என்பதை உறுதி செய்யும் வகையில், குடிகார நபர்களின் அலட்சியம் அவர்களின் உயிரை பறிக்க காரணமாக அமைந்துள்ளது.
3 நண்பர்கள் குழு:
திருச்சி (Trichy) மாவட்டத்தை சேர்ந்த நண்பர்கள் ஜெய கண்ணன், சிவசங்கர், சிவராஜ், ஆனந்தபாபு. இவர்களில் ஆனந்தபாபு மட்டும் சென்னையைச் (Chennai) சேர்ந்தவர் ஆவார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல முடிவெடுத்துள்ளனர். கொடைக்கானலில் (Kodaikanal) உள்ள வில்பட்டி, சின்னப்பள்ளம் பகுதியில் இருக்கும் தனியார் தங்கும் விடுதியில் இவர்கள் அரை எடுத்து தங்கி இருக்கின்றனர். TN Weather Update: காலை 10 மணிவரை 11 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
திடீர் மழையால் சோகம்:
அங்கு தங்களது ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த பார்பிக்யூ சிக்கன் (Grilled BBQ Chicken) சமைக்கும் கரி அடுப்பில், சிக்கனை சமைத்து சாப்பிட்டு உள்ளனர். பின் இவர்கள் நால்வரும் தனித்தனியாக அறையில் உறங்கிய நிலையில், ஜெய கண்ணன் மற்றும் ஆனந்தபாபு ஆகியோர் அவர்கள் தங்கியிருந்த அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தவாறு சடலமாக மறுநாள் காலையில் மீட்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அறையில் இருந்த பொருட்களை சோதனை செய்துள்ளனர். காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ஜெயக்கண்ணன் மற்றும் ஆனந்தபாபு இரவு நேரத்தில் சிக்கன் சமைத்துக் கொண்டிருந்தபோது, திடீரென மழை பெய்துள்ளது.
கார்பன் மோனாக்சைடு சூழ்ந்து சோகம்:
இதனால் கரியடுப்பை தங்களின் அறைக்குள் வைத்துவிட்டு, மதுபானம் அருந்திய போதையில் இருவரும் அப்படியே படுத்து உறங்கி உள்ளனர். இதனால் அடுப்பிலிருந்து வெளியேறிய புகையானது, அறை முழுவதும் பரவி வெளியேற வழி இல்லாமல் அது உயிருக்கு ஆபத்தான நிலையாக மாறி இருவரின் மூச்சுச்திணறல் மரணத்திற்கு காரணமானது அம்பலமானது. மேலும், அடுப்புக்கரியில் இருந்து வெளியேறிய கார்பன்-மோனாக்சைடு (Carbon-Monoxide) இதயம் மற்றும் மூளை போன்றவற்றை செயலிழக்க வைத்த காரணத்தால், இருவரும் உயிரிழந்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.