Katti Perungayam | Perungaya Thool File Pic (Photo Credit: YouTube)

டிசம்பர் 24, சென்னை (Health Tips): பெருங்காயத்தை (Perungayam) நாம் பெரும்பாலும் சமையலில் நறுமணம் தரக்கூடிய பொருளாகவே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இதில் பல்வேறு மருத்துவப் பயன்கள் உண்டு. பெருங்காயத்தில் புரதச்சத்து அதிகமுள்ளது. உடலில் புரோஜெஸ்ட்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதால், பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகளை சரிசெய்கிறது. அந்தவகையில், பெண்கள் பெருங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது பலன் தரும். அஜீரணத்துக்கு பெருங்காயத்தைவிட சிறந்த மருந்து உணவில் கிடையாது. வாழை, கொண்டைக்கடலை, பட்டாணி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளை உணவில் சேர்க்கும் போது, வாயு பிடிப்பு ஏற்படாமல் தடுக்க, பெருங்காயத்தை சேர்ப்பது நல்லது. தூள் பெருங்காயத்தில் உதிரியாக இருப்பதற்காக கோதுமை மாவு கலந்து இருப்பார்கள். சிலருக்கு, இதனால் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடும். அதனால் அவர்கள் கட்டி பெருங்காயத்தை பயன்படுத்துவது நல்லது. Health Tips: பித்தம், வாதம், கபம் சார்ந்த பிரச்சனையா உங்களுக்கு? உணவில் இந்த விஷயங்களை சேர்த்துக்கோங்க.. அசத்தல் டிப்ஸ்.!

கட்டி பெருங்காயம்:

அசாஃபோடிடா (Asafoetida) என்றும் அழைக்கப்படும் கட்டி பெருங்காயம் (Katti Perungayam), வலுவான சுவை மற்றும் கடுமையான நறுமணம் கொண்டதாகும். இது பல்வேறு ரெசிபிகளின் சுவையை மேம்படுத்தும். சாம்பார், ரசம், குழம்பு மற்றும் பலவற்றில் கட்டி பெருங்காயத்தை ஒரு சிட்டிகை சேர்க்கவும். இந்த பல்துறை மற்றும் அத்தியாவசிய மசாலா மூலம் சமையலின் ருசியை கூட்டும். ஈரப்பதம் இல்லாத உலர்ந்த, காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைப்பது நமது சாதத்தை சிறந்தது. இதை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.

தூள் பெருங்காயம்:

பெருங்காயம் 'கடவுளின் அமிர்தம்' என்று அழைக்கப்படுகிறது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியம் அளிக்கிறது. அஜீரணக்கோளாறுகளை விரட்டியடிக்கும் தன்மை பெருங்காயத்துக்கு உண்டு. வாய்வு பிடிப்பு நீங்க வெதுவெதுப்பான நீரில் பெருங்காயத்தூள் (Perungaya Thool) கலந்து குடிக்கலாம். வாழைப்பழம் தோல் உரித்து பழத்தின் மேல் பெருங்காய பொடியை வைத்து பல்லில் படாமல் விழுங்கினால் வாயு கழியும் என்பார்கள். மோரில் பெருங்காயம் சேர்த்து குடிக்கலாம். அன்றாட உணவு முறையில் ஏதாவது ஒரு வகையில் பெருங்காயம் சேர்ப்பது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவும். இருப்பினும், பெருங்காயத்தூளை விட கட்டி பெருங்காயம் சிறந்தது. பெருங்காயத்தூள் கடையில் வாங்காமல், வீட்டிலேயே சிறந்த முறையில் அரைத்து பொடியாக்கி பயன்படுத்துவது நல்லது.