டிசம்பர் 23, சென்னை (Health Tips): நமது உடலின் இயக்கம் என்பது, நாம் உண்ணும் உணவுகள் வாயிலாக நடக்கிறது. உணவுகளில் இருக்கும் சத்துக்களை பெற்றுக்கொள்ளும் உடல், தனது செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்வதால், நாம் நமது பணிகளை தொய்வின்றி செய்கிறோம். உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்றதில் எது ஒன்று அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் நோய் நம்மை தாக்கும். உடலின் முக்கிய முத்தாதுகளாக பித்தம், வாதம், கபம் சித்த மருத்துவத்தில் கூறப்படுகிறது. சித்த மருத்துவங்கள் பெரும்பாலும் பித்தம், வாதம், கபத்தை முதலில் சரிசெய்து, பின் உடலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும். இந்த முத்தோட்டங்கள் சமநிலை அடைந்தால், நோய் குணமாகும். வீட்டில் சமையல் அறையில் இருக்கும் ஏலக்காய், மஞ்சள், சீரகம், மிளகு, சுக்கு, பெருங்காயம், வெந்தயம், பூண்டு கொண்டு பித்தம், வாதம், கபத்தை சரி செய்யலாம். அதனாலேயே இதனை அஞ்சறை பெட்டியில் வைத்து பயன்படுத்தி வந்தனர். இன்று ஒவ்வொரு பொருளிலும் உள்ள மருத்துவ மகத்துவம் குறித்து காணலாம்.
சுக்கு (Dry Ginger):
கார்ப்பு சுவை கொண்ட சுக்கு, செரிமானம் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை சரி செய்யும் தன்மை கொண்டது ஆகும். அஜீரண பிரச்சனைகளை சரி செய்யும். உடலில் இருக்கும் வாதத்தை சமநிலைக்கு கொண்டு வர சுக்கு உதவுகிறது. கிழங்கு சார்ந்த உணவுகளை சமைக்கும்போது சுக்கு சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.
மஞ்சள் (Turmeric):
கசப்பு, கார்ப்பு சுவைகளை கொண்ட மஞ்சள், சக்திவாய்ந்த அலர்ஜி எதிர்ப்பு பண்பு கொண்டதாகும். இது சிறந்த ஆக்சிஜனேற்ற பண்புகளையும் கொண்டிருக்கிறது. நமது உடலில் வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும். இனிப்பு சார்ந்த பொருட்களைத் தவிர்த்து, பிற உணவுகளில் மஞ்சளை சேர்க்கலாம். Birth Control Tips: தம்பதிகளே கருத்தடை பற்றி சந்தேகமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
மிளகு (Pepper):
காரத்தன்மை கொண்ட மிளகு, நஞ்சு எதிர்ப்பு ஆற்றலை அதிகம் கொண்டது ஆகும். முக்கியமான செரிமானத்திற்கு மிகப்பெரிய உதவியை செய்கிறது. உடலில் இருக்கும் கபத்தை சமநிலைப்படுத்தி, ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
பூண்டு (Garlic):
வைரஸ் எதிர்ப்பு தன்மை, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை அதிகம் கொண்ட பூண்டு, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டது ஆகும். கிழங்கு, பருப்பு வகை உணவுகளை சமைக்கும்போது பூண்டை சேர்த்துக்கொள்ளலாம்.
சீரகம் (Cumin):
கார்ப்பு சுவையை கொண்ட சீரகம், உடலின் உள்ளுறுப்புகளையும் சீர்படுத்தும் மிகப்பெரிய தன்மை கொண்டது ஆகும். செரிமானத்திற்கு உதவி, பித்தத்தை சமநிலைப்படுத்துதல் என பல்வேறு நன்மைகளை சீரகம் செய்கிறது. வயிற்று உப்பசத்தை குறைக்கவும் பயன்படுகிறது. காரசாரமான உணவுகளை சமைக்கும்போது சீரகத்தை சேர்க்கலாம். Urulai Kilangu Kara Kari Recipe: உருளைக்கிழங்கு வைத்து இப்படி செஞ்சு பாருங்க.. அசத்தல் ரெசிபி டிப்ஸ் இதோ..!
ஏலக்காய் (Elakkay):
கார்ப்பு, இனிப்பு சுவையுடன் கொண்ட ஏலக்காய் செரிமானத்திற்கு உதவி செய்யும். உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்தி, வாயில் ஏற்படும் துர்நாற்றம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும். இனிப்பு மற்றும் இறைச்சி வகை உணவுகளுக்கு ஏலக்காய் சிறந்தது.
பெருங்காயம் (Perungayam):
கசப்பு, கார்ப்பு தன்மை சுவை கொண்ட பெருங்காயம் செரிமானத்திற்கு பெரும் உதவி செய்யும். வாயு, வயிற்றுப்பொருமல், வயிறு எரிச்சல் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்யும். கிழக்கு, பருப்பு வகை உணவுகளை சமைக்கும்போது பெருங்காயத்தை பயன்படுத்தலாம்.
வெந்தயம் (Venthayam):
உடலினை இரும்பு போல உறுதியாக்கும் தன்மை கொண்ட வெந்தயம் கசப்பு சுவை கொண்டது ஆகும். உடலில் இருக்கும் பித்தத்தை நீக்கி, உடலை பாதுகாக்கும் தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தய விதையில் நார்சத்து, ஆண்டி-ஆக்சிடென்ட் சத்துக்கள் உள்ளன. இதனால் செரிமானம் மேம்படும், மலச்சிக்கல் சரியாகும். காரசாரமான உணவுகளை சமைக்கும்போது வெந்தயத்தை சேர்க்கலாம்.
குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் / தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம். அவரின் அறிவுறுத்தலின் பேரில் தேவைப்பட்டால் உடல் பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனைக்கேற்ப செயல்படலாம்.