
மார்ச் 06, சென்னை (Health Tips): உலகளவில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் காய்கறி உருளைக்கிழங்கு (Potato) ஆகும். அரிசி, கோதுமை போன்ற தானியங்களுக்கு அடுத்து மக்களின் தேவையை நிறைவேற்றுவது உருளைக்கிழங்கு தான். இதன் தாயகம் சிலி, பெரு, மெக்சிகோ போன்ற நாடுகளாகும். இந்தியாவுக்கு 17ஆம் நூற்றாண்டில் அறிமுகமானது. தமிழகத்தில் 1882இல் நீலகிரி மலைப்பகுதிகளில் பயிரிடப்பட்டது. இதன் தாவரவியல் பெயர் 'சொலானம் டியூபரோசம்' என்பதாகும். இது, சொலனேசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது. Fatty Liver Disease: 80 சதவீத ஐடி ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு.. கவனிக்க வேண்டிய அறிகுறிகள்..!
சத்துக்கள்:
உருளைக்கிழங்கில் புரதம், கொழுப்பு, மாவு, நார்ச்சத்துகள் அடங்கியுள்ளன. மேலும், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, தாமிரம், சோடியம், கந்தகம், பொட்டாசியம் போன்ற தாதுப்பொருட்களும், தயமின், ரிபோபிளேவின், போயிக் அமிலம் கரோட்டின், நியாசின் போன்ற வேதிப் பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
மருத்துவ பயன்கள்:
உருளைக்கிழங்கில் உடல் வளர்ச்சியூட்டும் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன. குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை கொடுக்க உடல் வளர்ச்சி ஏற்படும். இது ஜீரணத்தைக் கூட்டும். உருளைக்கிழங்கிலிருந்து குளுக்கோஸ் போன்ற மாவுப்பொருள் எடுக்கப்படுகிறது. தீக்காயம் ஏற்பட்டால் உருளைக்கிழங்கை அரைத்துப் பற்றுப் போடலாம். உருளைக்கிழங்கு உடல் வெப்பத்தை தணிக்கும். கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நெய்யில் வதக்கி சாப்பிட்டால் உடல் வலுப்பெறும். மலச்சிக்கலை போக்க சிறந்ததாகும். உருளைக்கிழங்கு சாறு வயிற்றுப் புண்களுக்கு சிறந்த மருந்தாகிறது. முக்கியமாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகக் குறைவாகவே உருளைக்கிழங்கை உண்ண வேண்டும்.