ஜூலை 19, சென்னை (Spritual News Tamil): ஆடி மாதத்தில் கோவில்களில் எப்போதும் பண்டிகை களைகட்டும். இதில் புதுமண தம்பதிகளை ஆடி திருவிழாவுக்கு அழைத்துச் சென்று விருந்து வைத்து மகிழ்வார்கள். இவ்வாறான கொண்டாட்டங்கள் நிறைந்த ஆடி மாதத்தில் திருமணங்கள் கூடாது என்கிறார்கள். அதற்கான காரணங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்துமத புராணங்களின்படி, பரம்பொருளான சிவன் தனது மனைவியான அன்னை பார்வதியை பார்க்கச் செல்லும் காலமாக ஆடி கூறப்படுகிறது. தன்னை விட்டு பிரிந்து சென்ற தன் பாதி சக்தியுடன் சிவம் இணையும் காலம் ஆடி மாதமாக கருதப்படுகிறது. இந்த காலத்தில் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. ஆடி மாதத்தை பொறுத்தவரையில் மழை, காற்று போன்றவை இருக்கும்.
ஆடி திருமணம் காரணம் (Aadi Month Marriage):
'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பது நமது பழமொழிகளில் ஒன்றாகும். ஆடி மாதத்தில் உழவுப் பணிகளை மேற்கொள்ளவும், அதற்கான காரியங்களை முன்னெடுக்கவும் சிறப்பான தருணமாகும். இதனால் விவசாயத்திற்கு அதிக பணம் செலவு பிடிக்கும். ஆகையால் அதே காலத்தில் மற்றொரு சுமையை தூக்கக்கூடாது என்பதற்காக திருமண செலவுகளை குறைக்க ஆடி மாதத்தில் திருமணங்களை அன்றிலிருந்து இன்று வரை தமிழர்கள் நடத்துவதில்லை. ஆடி மாதம் தேதி சொல்லிவிட்டு ஆவணியில் நிச்சயம் செய்து திருமணம் செய்வார்கள். ஆடி மாதத்தில் திருமணம் செய்யாததால் உண்மை காரணம் இதுதான். இன்றுள்ள காலத்தில் திருமணம் என்பது பல தடைகளை கடந்து விட்டது. ஆடியும் காலப்போக்கில் அந்த தடையை கடந்துவிடலாம்.
புராணத்தின் படி, ஆடி மாதத்தில் தவமிருந்து பார்வதி-சிவன் சேர்ந்துள்ளனர். கணவன் மனைவியின் ஒற்றுமையை கொண்டாடவும், தம்பதிகளுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு தற்காலிக பிரிவு உண்டானாலும், இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தங்களை அடுத்த கட்ட நகர்வுக்கு மனக்கசப்புகளை பேசி தீர்த்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதை முன்னோர்களின் கருத்து.