World Earth Day (Photo Credit: LatestLY)

ஏப்ரல் 22, புதுடெல்லி (New Delhi): 1969 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் இயற்கை ஆர்வலர் ஜான் மெக்கானல் பூமி தினத்தை கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தை முன்வைத்தார். தொடர்ந்து அமெரிக்க நாட்டு செனட் உறுப்பினராக இருந்து கெய்லார்ட் நெல்சன் ஏப்ரல் 22 ஆம் நாளன்று சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார். அதற்கு பூமி தின விழிப்புணர்வு என்று பெயரும் வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினம் (World Earth Day) கொண்டாடப்படுகிறது. Google Doodle for Earth Day: "இன்னுயிர்யெல்லாம் இனிமையாய் வாழ்ந்திடும் என் மேனியில் பூமி.." பூமி தினத்தை முன்னிட்டு டூடுள் வெளியிட்ட கூகுள்..!

அழிவை நோக்கி போகும் பூமி: சுற்றுச்சூழலைக் காக்க பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவை போதுமானதாக இல்லாததால் பூமி அழிவுப்பாதையை நோக்கி நகர்கிறது. இந்த ஆண்டு பூமி தின கருப்பொருளாக பிளானட் Vs பிளாஸ்டிக் (Planet Vs Plastics) கூறப்பட்டுள்ளது. மனிதர்களின் செயற்கையான செயல்பாட்டால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் 5 ட்ரில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது. இப்போது பிரச்னை என்னவென்றால், மக்கள் வீட்டில் தட்டுகள் மற்றும் பலகைகளில் கூட பிளாஸ்டிக் பயன்படுத்துகிறார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதே நம் முயற்சியாக இருக்க வேண்டும்