ஏப்ரல் 22, புதுடெல்லி (New Delhi): 1969 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் இயற்கை ஆர்வலர் ஜான் மெக்கானல் பூமி தினத்தை கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தை முன்வைத்தார். தொடர்ந்து அமெரிக்க நாட்டு செனட் உறுப்பினராக இருந்து கெய்லார்ட் நெல்சன் ஏப்ரல் 22 ஆம் நாளன்று சுற்றுச்சூழல் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வலியுறுத்தினார். அதற்கு பூமி தின விழிப்புணர்வு என்று பெயரும் வைத்தார். அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் நாள் பூமி தினம் கொண்டாடப்படுகிறது. Madurai Chithirai Festival 2024: கோலாகலமாக நடக்கும் மதுரை சித்திரைத் திருவிழா.. இன்று தேரோட்டம்..!
இன்று பூமி தின (Earth Day) கொண்டாடப்படுவதை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுள் (Google Doodle) வெளியிட்டுள்ளது. அதில் உலகில் உள்ள ஆறு கண்டங்களின் தனித்திறனை போற்றும் வகையில் சிறப்பு டூடுளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.