ஏப்ரல் 10, சென்னை (Chennai): பொதுவாக மாத்திரை என்றால் பெரியதாக இருக்கும், கசப்பாக இருக்கும் என்றுதான் நமக்கு மனதில் பதிந்தது. ஆனால் அவை அனைத்தையும் மாற்றியது என்றால், அது ஹோமியோபதி தான். சிறிய உருண்டையாக இனிப்பாக இருக்கும், இந்த மாத்திரையை குழந்தைகள் அடம் பிடிக்காமல் சாப்பிட்டுக் கொள்வார்கள். இதனாலேயே பெற்றோர்கள் ஹோமியோபதிக்கு தான் சிறுவர்களை அழைத்துச் செல்வர். இப்படிப்பட்ட ஹோமியோபதிக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் உலகெங்கும் உலக ஹோமியோபதி தினமானது (World Homeopathy Day) ஏப்ரல் 10 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

இந்த ஹோமியோபதி மருத்துவம் ஆனது 1700 களின் பிற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஜெர்மனியை சேர்ந்த மருத்துவர் கிறிஸ்டியன் ஃபெடரிக் சாமுவேல் ஹனிமன் (Dr Samuel Hahnemann) என்பவர் கண்டுபிடித்தார். எனவே தான் அவரது பிறந்த நாளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. TASMAC Shut For 3 Days: 'குடி'மகன்களே முதலில் ஓட்டு போடுங்கள்.. தேர்தலை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

இந்த ஹோமியோபதி முறையில் எந்தவித பக்க விளைவுகளும் கிடையாது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு முதல் சரும பிரச்சனைகள் வரை அனைத்திற்கும் சிறந்ததாக ஹோமியோபதி பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காந்திக்கு இந்த ஹோமியோபதி மருத்துவமுறை தான் மிகவும் பிடித்தமான ஒன்றாகுமாம். இந்த ஹோமியோபதியில் அறுவை சிகிச்சைகள் கிடையாது. ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் ஆரம்ப நிலையில் சரி செய்து விடலாம். இந்தியாவிலும் இந்த மருத்துவமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.