Cake (Photo Credit: Pixabay)

மார்ச் 19, புதுடெல்லி (New Delhi): பேக்கரிக்கு சென்றாலே அனைவரும் விரும்பி வாங்கி சாப்பிடுவது வெண்ணிலா சீஸ் கேக் (Vanilla Cheesecake). பார்ப்பதற்கு மிகவும் அழகாக, சுவையும் எதனுடனும் காம்ப்ரமைஸ் செய்ய முடியாத அளவுக்கு இருக்கும். ஆனால் இதை வீட்டிலேயே நாம் செய்து சாப்பிடலாம். பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதற்கான செய்முறை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

கிரீம் சீஸ் - 150 கிராம்

பிரஷ் கிரீம் - 100 மில்லி லிட்டர்

50 கிராம் சௌர் கிரீம் (sour cream) அல்லது 100 மில்லி லிட்டர் புளிக்காத கெட்டி தயிர்

கண்டென்ஸ்ட் மில்க் - 150 மில்லி லிட்டர்

வெண்ணிலா எசென்ஸ் - 1 ஸ்பூன்

கார்ன் ப்பிளார் - 1 ஸ்பூன்

பால் - 2 ஸ்பூன்

பிஸ்கட் - 6

வெண்ணை - சிறிதளவு

செய்முறை: முதலில் பிஸ்கட்டை பொடியாக நொறுக்க வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் அதில் உருகிய வெண்ணை சேர்க்கவும். பொடியாக நொறுக்கிய பிஸ்கட்டையும் அதனுடன் சேர்க்க வேண்டும். பின்னர் குழிவான கேக் டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து அந்த டிரேயில் பிஸ்கட் கலவையை பரப்பி வைக்க வேண்டும். PSL 2024 Final: பாகிஸ்தான் சூப்பர் லீக்.. கடைசி பந்து வரை சென்று சாம்பியனான இஸ்லாமாபாத்..!

ஒரு அகண்ட பாத்திரத்தில் கிரீம் சீஸ், சௌர் கிரீம் மற்றும் பிரஷ் கிரீம் ஆகியவற்றை நன்கு கலந்து அடிக்கவும். அனைத்தும் நன்கு கலந்ததும் கண்டென்ஸ்ட் மில்க் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்க்கவும். இப்பொழுது கலவை நன்கு தோசை மாவு பதத்திற்கு வந்திருக்கும். கார்ன் ப்பிளார் மாவை பாலுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து கொள்ளவும். கரைத்த மாவை கேக் கலவையில் சேர்க்கவும்.

இந்த கலவையை, தயார் செய்து வைத்திருந்த பிஸ்கட் மேலே ஊற்றவும். கேக் கலவையை 180 டிகிரி ஓவனில் 30 நிமிடம் வைக்க வேண்டும். மேலும் 30 நிமிடம் கேக்கை ஆறவிடவும். சுவையான சீஸ் கேக் தயார். இதனை பிரிட்ஜ்ல் வைத்தும் பரிமாறலாம்.