செப்டம்பர் 18, சென்னை (Festival News): தமிழ் மாதங்களில் சிறந்த மாதமான புரட்டாசி (Purattasi Month) மாதத்தில், காலநிலையில் மாற்றம் ஏற்படும் மாதம் என்பதாலும், தெய்வ சிந்தனையில் இருக்க வேண்டிய மாதம் என்பதாலும் இந்த மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கூறப்படுகின்றது. வாழ்க்கையை நல்வழிக்கு எடுத்துச் செல்லும் மாதம் என்பதால் புரட்டாசி மாதம் தனிச்சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகின்றது.
புரட்டாசி மாதம்:
புண்ணியம் தரும் மாதங்களில் ஒன்று புரட்டாசி (Purattasi) மாதமாகும். பொதுவாக ஒரு மாதத்தில் ஏதாவது ஒரு நட்சத்திரம், திதி, கிழமை ஆகியவை தான் சிறப்பானதாக அமையும். ஆனால், புரட்டாசி மாதத்தின் அனைத்து நாட்களுமே சிறப்பான புண்ணிய பலன்களை தரும். இது தெய்வ அருள் மட்டுமின்றி, முன்னோர்களின் அருளையும் நமக்கு பரிபூரணமாக பெற்றுத்தரக்கூடிய மாதமாகும். புரட்டாசி மாதத்தில் நாம் செய்யும் வழிபாடுகளும், வழங்கும் தானமும் முன் ஜென்ம பாவங்களை நீக்கி, வாழும் காலத்தில் மகிழ்ச்சியையும், சந்தோசத்தையும் வாழ்க்கைக்கு பிறகு இறைவனின் திருவடியில் இருக்கும் பாக்கியமும் கிடைக்க வழிவகுக்கும். Tiruvannamalai: புரட்டாசி பௌர்ணமி திருவண்ணாமலை கிரிவலம்.. போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் சாலை மறியல்.!
பெருமாள் வழிபாடு:
புரட்டாசி மாதத்தில் திருப்பதி உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் (Perumal Temple) பிரம்மோற்சவம் நடத்தப்படுவது வழக்கம். தெய்வங்கள் பெருமாளை வழிபட பூமிக்கு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவர். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தான் சனி பகவான் அவதரித்தார் என சொல்லப்படுவதால், புரட்டாசியில் விரதம் இருந்தால் சனி பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை (Lord Perumal) வழிபட்டால் அனைத்துவிதமான கஷ்டங்கள், துன்பங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கை.
விரத பலன்கள்:
புரட்டாசி மாதத்தின் முதல் நாள், சூரிய பகவான் கன்னி ராசி பயணத்தில் தொடங்கி, கடைசி நாள் வரை எந்த நாளில் நாம் என்ன செய்தாலும் அதற்கு ஒரே மாதிரியான பலன் கிடைக்கும். புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய மாதமாகும். இம்மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதம் இருக்க முடியாதவர்கள் கூட புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, பெருமாளை நினைத்து மனதார வழிபாடு செய்யலாம். இதன்மூலம், ஏகாதசி விரதம் இருந்து வழிபட்ட புண்ணியமும், புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருந்த பலனும் கிடைத்து விடும். World Bamboo Day 2024: உலக மூங்கில் தினம்.. பச்சைத் தங்கத்தின் சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறிந்துக் கொள்வோமா?!
மகாளய பட்சம்:
புரட்டாசி மாதத்தில் பித்ருக்களின் ஆசியை பெறுவதற்குரிய மகாளய பட்சமும் (Mahalaya Paksha), மகாளய அமாவாசையும் வருகிறது. இந்த 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், பிறருக்கு தானங்கள் வழங்குவதும் நம்முடைய பல தலைமுறை பாவங்களை போக்கக் கூடியதாகும். மேலும், நம்முடைய முன்னோர்கள் அனைவரும் பித்ருலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து, நம்முடன் தங்கி இருந்து, நாம் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணங்கள் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்குவதாக ஐதீகம் உள்ளது.
புரட்டாசி 2024 நாள் விவரம்:
புண்ணிய மாதமான புரட்டாசி மாதம் இந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தொடங்கியது. புரட்டாசியின் முதல் நாள் மற்றும் கடைசி நாள் ஆகிய 2 நாட்களுமே பெளர்ணமி திதியாக அமைவதால், இந்த நாளில் செய்யப்படும் சத்ய நாராயண பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். செப்டம்பர் 17-ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 17-ஆம் தேதி வரை அமைந்துள்ள புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. மாதத்தின் முதல் சனிக்கிழமையில் சங்கடஹர சதுர்த்தியும், 2-வது சனிக்கிழமையில் ஏகாதசியும், கடைசி சனிக்கிழமையில் திருவோண விரதம், விஜய தசமி மற்றும் அதற்கு அடுத்த நாளே ஏகாதசியும் வருவதாக அமைந்துள்ளது. அக்டோபர் 02-ஆம் தேதியான புதன்கிழமை மகாளய அமாவாசையும், 2 பெளர்ணமிகளும் புரட்டாசி மாதத்தில் வருவது சிறப்பு வாய்ந்ததாகும்.