செப்டம்பர் 14, புளோரிடா (Social Viral): அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் ஆஸ்டின் மேக்மில்லன் (Austen MacMillan). சிறுவனின் இல்லத்தில் சம்பவத்தன்று, அவரின் தந்தையின் தோழர் ஜேசன் பியூட்டே (Jason Piquette) தங்கியிருந்துள்ளார்.
அவர் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்த நிலையில், ஆழமான பகுதியில் சென்று திடீரென அங்கயே சிக்கிக்கொண்டு மயங்கியுள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ந்துபோன சிறுவன், உடனடியாக அவரை தண்ணீருக்கு மேலே இழுத்து வந்துள்ளான். பின் வெளியே சென்று தனது தந்தையை அழைக்க முயற்சித்துள்ளார். உதவிக்காக யாரேனும் இருக்கிறார்களா? என பார்த்துள்ளார். HBD Suryakumar Yadav: 33 வயதில் அடியெடுத்து வைக்கும் சூரியகுமார் யாதவ்; உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் சாதனை நாயகனுக்கு இன்று பிறந்தநாள்.!
ஆனால், அங்கு யாரும் இல்லாத நிலையில், படத்தில் பார்த்ததை வைத்து உடனடியாக சிபிஆர் எனப்படும் முதலுதவி சிகிச்சையை சிறுவன் மேற்கொண்டு இருக்கிறான். இந்த முயற்சியில் ஜேசன் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தார்.
வெளியே சென்றிருந்த தந்தை வீட்டிற்கு வந்தபோது மகன் நடந்ததை கூற, அவர் உடனடியாக அமெரிக்காவின் அவசர அழைப்பு எண் 911 க்கு (இந்தியாவில் காவலர்களுக்கு 100, அவசர ஊர்திக்கு 108 போல அமெரிக்காவில் அவசர உதவிக்கு 911) தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்துள்ளார்.
அவர்கள் விரைந்து வந்து ஜேசனை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சிறுவன் ஒரு உயிரை காப்பாற்ற தனி நபராக போராடியது அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருக்கிறது. சிறுவனின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
12-year-old boy saves therapist from drowning in swimming pool. @evapilgrim has more on the daring rescue caught on camera. pic.twitter.com/krE7SkjSIh
— Good Morning America (@GMA) September 12, 2023