ஜனவரி 09, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் தனது கல்லூரி படிப்பை படித்துக் கொண்டு வருபவர் ஹர்ஷத் கௌரவ். இவருக்கு வயது 20. இவர் கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தன்னுடைய நண்பர்களுடன் அம்ரித்லால்வாடி பகுதியில் பேசிக் கொண்டு உள்ளார். அப்போது நபர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென தவறி அங்கிருந்து இரண்டு வயது குழந்தை மீது விழுந்துள்ளார். Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி.. 25 லட்சம் இழப்பீடு அறிவித்த ஆந்திர அரசு.!
துடிதுடிக்க குழந்தை பலி:
ஹர்ஷத் அவருடைய நண்பருடன் தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார். அதில் இருவரும் மாறி மாறி தள்ளியதிலேயே அவர் குழந்தை மீது விழுந்துள்ளார். குழந்தையின் தாயார் தள்ளி சென்று விளையாடுமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் தவறி விழுந்த குழந்தை சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை ஜனவரி நான்காம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு கௌரவ்வின் கவனக் குறைவே காரணம் என்று காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.