CM Chandrababu Naidu | Tirupati Stampede (Photo Credit: @ANI X)

ஜனவரி 09, திருப்பதி (Andhra Pradesh News): வைகுண்ட ஏகாதசி & சொர்க்கவாசல் திறப்பு திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளை நேரில் கண்டு வர பக்தர்கள் பலரும் தயாராக இருந்தனர்.

திருப்பதி கூட்ட நெரிசல்:

இதனிடையே, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, ஏழுமலையான் கோவிலில், இன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் நேற்று முதலாகவே இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்க முண்டியடித்த இருந்தனர். இதனிடையே, கட்டுக்கடங்காமல் மக்கள் அதிகம் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளனர். சேலம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது. Tirupati Stampede: திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 லட்சம் இழப்பீடு அறிவித்த அரசு.!

இழப்பீடு அறிவித்த ஆந்திர அரசு:

இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆந்திர மாநில அரசின் உள்துறை அமைச்சர் அனிதா மற்றும் மாநில அறநிலையத்துறை அமைச்சர் அனம் ராமநாராயண ரெட்டி ஆகியோரும் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினர். இந்நிலையில் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும், மற்றும் இறந்தவர்களின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்யும் என ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், முதல்வர் சந்திரபாபு நாயுடு () விரைவில் மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.