
அக்டோபர் 14, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் (Jaipur) தீப்பற்றியபடி ஓட்டுநர் இன்றி ஓடிய காரால், சாலையில் வாகன ஓட்டிகள் பீதியடைந்து தப்பி ஓடினர். ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் ஜித்தேந்திர ஜாங்கிட் தனது காரில் அஜ்மீர் சாலையில் உள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் இருந்து புகை வந்தது. இதனால் காரை நிறுத்தி, முன்பகுதியை திறந்து பார்த்துள்ளார். உடனே, இன்ஜின் தீப்பற்றி (Car On Fire) எரிந்தது. இதனால், அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து சென்றார். கார் தீ பற்றி எரிந்ததில், அதன் ஹேன்ட் பிரேக் சேதமடைந்து வண்டி பாலத்தில் இருந்து கீழ் நோக்கி சென்றது. Baba Siddique: 47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை, 3 துப்பாக்கி குண்டுகளில் அஸ்தமனம்; மராட்டியத்தில் என்சிபி தலைவர் சுட்டுக்கொலை.!
தீப்பற்றிய படி ஒரு கார் பாலத்தில் இருந்து வருவதை பார்த்த வாகன ஓட்டிகள், பீதியில் தங்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இறுதியில் அந்த கார் நின்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. அதன்பின்னர், சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி நின்றது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.
தீப்பற்றியபடி ஓடிய கார்:
@gharkekalesh pic.twitter.com/VVuBFH8xFU
— Arhant Shelby (@Arhantt_pvt) October 13, 2024