அக்டோபர் 13, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பாந்த்ரா கிழக்கு தொகுதியில் கடந்த 1999, 2004 மற்றும் 2009 ஆகிய சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ வாக இருந்தவர் பாபா சித்திக் (Baba Siddique). இவர் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2009 வரை உணவுப்பொருள் வழங்கல் துறையில் அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார். கடந்த 1958ம் ஆண்டு பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பிறந்த சித்திக், 1977ல் பாந்திரா கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைந்து அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட வாரியாக, மாநில வாரியாக பல பொறுப்புகளில் பணியாற்றியவர், பிப்ரவரி 2024ல் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறார். Mosquitoes inside Food: ஆசையாக வாங்கிய இனிப்பில் கிடந்த கொசுக்கள்; இனிப்பகத்தில் வாடிக்கையாளர்கள் வாக்குவாதம்.!
கண்ணிமைக்கும் நேரத்தில் சுட்டுக்கொலை:
இவரின் மகன் ஸிசண் சித்திக் (Zeeshan Siddique) வந்ரே கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ பொறுப்பில் இருக்கிறார். மகாராஷ்டிரா மாநில அரசியலில் தவிர்க்க முடியாத நபராக இருந்து வந்த சித்திக், பல திரைப்பிரபலங்களுடன் நெருக்கமான நபர் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 09:30 மணியளவில் பாபா சித்திக், தனது மகனின் கட்சி அலுவலக வாசலில் காரில் ஏறுவதற்கு நின்று கொண்டு இருந்தார். அச்சமயம் அங்கு வந்த 3 பேர் கும்பல், சித்திக்கை துப்பாக்கியால் 3 முறை சுட்டத் தப்பிச் சென்றது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்தபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும், அம்மாநில முதல்வர் மருத்துவமனைக்கு சென்று சித்திக்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
47 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை முடிந்தது:
மேலும், நடிகர் சல்மான் கான் சித்திக்கின் நெருங்கிய நண்பர் என்பதால், அவரும் மருத்துவமனைக்கு நேரில் வந்திருந்தார். இந்த விஷயம் தொடர்பாக துரித விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சித்திக்கை சுட்டதாக உத்திரபிரதேசம், ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்தனர். மூவராக வந்து சம்பவத்தை அரங்கேற்றிய நிலையில், அவருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். கைதானவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கப்டுகிறது. கிட்டத்தட்ட கடந்த 47 ஆண்டுகளாக அரசியலில் பணியாற்றி மக்கள்பணி செய்தவர், தனது 66 வயதில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மஹாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும், எதிர்க்கட்சிகள் (அகில இந்திய காங்கிரஸ் +) சார்பில் அம்மாநில ஆளுங்கட்சியாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, சரத் பவார் என்சிபி, பாஜக கூட்டணி அரசு மீது கடும் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே சித்திக்கிற்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே இந்த சோகமும் நடந்து முடிந்துள்ளது. சல்மான் கானுக்கான பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
லீலாவதி மருத்துவமனைக்கு நேரில் வந்த நடிகர் சல்மான் கான்:
Last night #SalmanKhan reaches Leelavati hospital to meet #BabaSiddique’s Family..!! 💔 pic.twitter.com/2NrRrc1nLS
— Salman Khan Fan Club (@BSKFanClub) October 13, 2024