Visuals from Video (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 08, சென்னை (Trending Video): இரயில் பயணத்தில் படிக்கட்டில் கெத்தாக நின்று கொண்டு, படிக்கட்டில் அமர்ந்து அசால்ட்டாக பயணம் செய்வோருக்கு இந்த வீடியோ எச்சரிக்கை சமர்ப்பணம்.

மனித உயிர் என்பது விலைமதிப்பற்றது. இன்றளவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மனிதனை வேறொரு பரிணாம வளர்ச்சிக்கு எடுத்து சென்றுள்ளது. இவ்வாறான நிலையில் தான் நாம் பல சவால்களையும் எதிர்கொள்ள தொடங்கியுள்ளோம்.

வளரும் பருவத்தில் அனைவருக்கும் இருக்கும் பயமறியா எண்ணம் என்பது பலருக்கும் இயல்பான ஒன்று. இப்பருவத்தில் நாம் சொல்வதை இளம் தலைமுறை பெரும்பாலும் கேட்காது. அவர்களின் போக்கில் சிலர் செயல்படுவார்கள்.

இவர்களிடம் அதற்கான அறிவுரை வழங்கினாலும் ஏற்பது இல்லை. சிலர் தனது செயலில் உள்ள நல்தீ வினைகளை கேட்டறிந்து செயல்படவும் செய்கிறார்கள். இந்நிலையில், இளம்பெண் ஒருவர் ஆர்வ மிகுதியில் மரணத்தின் தருவாயே எட்டிப்பார்த்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. Rajasthan CM on Rape Accuse: கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இனி அரசு வேலை இல்லை; ராஜஸ்தான் மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு.! 

இரயில் பயணத்தின்போது இளம்பெண் ஒருவர் புறநகர் இரயிலின் படியில் தொங்கியவாறு பயணம் செய்கிறார். அவர் படியில் நின்றவாறு வெளியே எட்டிப்பார்க்க நினைத்தபோது, சற்றும் எதிர்பாராது மற்றொரு தண்டவாளத்தில் எதிர்திசையில் புறநகர் இரயில் கடந்து சென்றது.

இதனால் நிலைகுலைந்த பெண்மணி இரயிலில் இருந்து தவறி விழவிருந்த சமயத்தில், அங்கிருந்தவர்கள் பெண்ணை இலாவகமாக பிடித்து உயிரை காப்பாற்றினர். ஒருகணம் பெண்மணிக்கு நிலைமை புரியவில்லை. பின்னர் சுதாரித்துக்கொண்டார்.

இதன் வாயிலாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், இரயில் பயணங்களின் போது அனாவசியமாக கரம்-சிரம்-புறத்தை வெளியே நீட்டினால் ஒன்று அவை துண்டிக்கப்படும்; இல்லையேல் நமது உடல் துண்டாக்கப்பட்டு உயிர் பறிபோகும் என்பது தான்.

இரயில் பயணத்தில் படிக்கட்டில் கெத்தாக நின்று கொண்டு, படிக்கட்டில் அமர்ந்து அசால்ட்டாக பயணம் செய்வோருக்கு இந்த வீடியோ எச்சரிக்கை சமர்ப்பணம் என்பது குறிப்பிடத்தக்கது.