ஜூலை 07, திருவனந்தபுரம் (Kerala News): கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் காட்டாக்கடை அருகேயுள்ள குடியிருப்புப் பகுதியில் அருகே ஓடைப்பகுதியில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை (King Cobra), பருத்திப்பள்ளி வனத்துறையின் பெண் அதிகாரி ரோஷ்னி, பாதுகாப்பாக பிடிக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குடிபோதையில் அரசியல் புள்ளியின் மகன் பெண்ணிடம் அநாகரீகம்.. அரை நிர்வாண வீடியோ வைரல்.!
ராஜநாகத்தை பிடிக்கும் வீடியோ வைரல்:
நேற்று (ஜூலை 06) மதியம் 12.30 மணிக்கு இந்த மீட்புப் பணிகள் நடைபெற்றன. பின்னர், அந்த ராஜநாகம் பாதுகாப்பாக காட்டில் விடப்பட்டது. பெண் வன ஊழியரின் துணிச்சலான இச்செயல் சமூக வலைதளங்களில் பெரும் பாராட்டுகளை பெற்றது. தற்போது, இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ இதோ:
View this post on Instagram