டிசம்பர் 08, அடிலெய்டு (Cricket News): ஆஸ்திரேலியாவுக்கு (AUS Vs IND) சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி (Team India Australia Tour), ரோகித் சர்மா (Rohit Sharma) தலைமையில் டெஸ்ட் (IND Vs AUS Test) போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது. இதில் முதல் டெஸ்ட் (IND Vs AUS 1st Test 2024) ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெற்ற வந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது.
இந்தியா ரன்கள் விபரம்:
முதலில் இந்தியா 44.1 ஓவர் முடிவில் 10 ரன்கள் இழப்புக்கு 180 ரன்களை சேர்த்து இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 36.5 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழந்த இந்திய அணி 175 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. இந்திய அணியினர் நின்று நிதானமாக ஆட முயற்சித்தாலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு இந்திய அணியை தகர்க்கத் தொடங்கியது. இதனால் இந்தியா அடுத்தடுத்து ரன்களை குவிக்க இயலாமல் போனது. Harbhajan Singh On MS Dhoni Rift: 'நான் தோனியிடம் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டது' - ஹர்பஜன் சிங் பகீர் பேச்சு..!
ஆஸ்திரேலிய அணி வெற்றி:
பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியின் சார்பில் விளையாடிய வீரர்கள், அதிரடியாக களம் கண்டு இருந்ததால் அதிக ரன்களை குவித்தனர். முதல் இன்னிங்ஸில் 87.3 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணிக்கு, இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக 19 ரன்கள் என்ற இலக்கிய என்ற நிலை உருவாகியது. தொடர்ந்து ஆஸ்திரேலியா நான்கு ஓவர்களுக்குள், 3.2 ஓவரில் தனது இலக்கை எட்டி வெற்றி அடைந்தது.
இதனால் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி அடைந்து இருக்கிறது. இது இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளது. அடுத்த போட்டி பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில், வரும் டிசம்பர் 14, 2024 அன்று நடைபெறுகிறது.