ஜூலை 14, அசாம் (Assam News): அசாம் மாநிலத்தில் உள்ள நல்பாரி மாவட்டம் போரோலியாபாராவைச் சேர்ந்தவர் மணக் அலி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், மனைவி வேறொரு நபருடன் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். கள்ளக்காதலனுடன் இரண்டு முறை வீட்டில் இருந்தும் வெளியேறியவர் தனது குழந்தைக்காக மீண்டும் சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இதன் காரணமாக குடும்பத்தில் தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. குடும்பத்தினர் ஒவ்வொரு முறையும் சமாதானம் செய்த நிலையில், வாழ்க்கையை வெறுத்த மணிக் அலி, சட்டபூர்வமாக மனைவியை பிரிவதற்கு இருவர் சம்மதத்துடன் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். Trending Video: நடுரோட்டில் செருப்பால் தாக்கி அடித்து உருண்ட பெண்கள்.. பாதயாத்திரையில் சம்பவம்.!
மனைவியுடனான விவாகரத்தால் துள்ளிக்குதித்த கணவர் :
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக இருவருக்கும் விவாகரத்தும் கிடைத்துள்ளது. தனது மனைவியுடன் திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி என்ற மகிழ்ச்சியில் இருந்தவர், எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று கூச்சலிட்டுள்ளார். மேலும் 40 லிட்டர் பால் வாங்கி இன்று முதல் எனது மனைவியிடம் இருந்து எனக்கு விடுதலை என்று கூறிக்கொண்டே தனக்கு தானே பாலபிஷேகம் செய்து குளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
தனக்கு தானே பாலபிஷேகம் செய்த வீடியோ :
Assam Man Milk Bath After Divorce With His Wife | భార్యతో విడాకులు.. 40 లీటర్ల పాలతో భర్త స్నానం#assamman #milkbath #husbandandwife #divorce #viralvídeo #latestnews #andhraprabha #andhraprabhanews pic.twitter.com/Mkly7QO7iY
— Andhra Prabha News (@andhraprabha_) July 13, 2025