ஜூலை 14, ஹரித்வார் (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ரிஷிகுல் தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் இருவர் சரமாரியாக தாக்கி கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்கூட்டியில் சென்ற பெண்ணுக்கும், கன்வார் பாதயாத்திரை சென்ற பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்தவர்கள் ஒருவரையொருவர் செருப்பால் தாக்கி கொண்டனர். மேலும் இருவரும் சண்டையிட்டபடி நடுரோட்டில் உருண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து யாத்திரைக்கு சென்ற பெண்ணுக்கு ஆதரவாக பலரும் அங்கே வந்ததால், ஸ்கூட்டியில் இருந்த பெண் அங்கிருந்து உடனடியாக வெளியேறினார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. Trending Video: ரேபிஸ் தடுப்பூசிக்காக 20 கி.மீ கால் கடுக்க நடந்த 95 வயது மூதாட்டி.!
ஹரித்வாரில் பெண்கள் அடித்துக்கொண்ட வீடியோ :
#हरिद्वार: ऋषिकुल हाईवे पर महिला से बदसलूकी का वीडियो वायरल।#सावन माह में चल रही कांवड़ यात्रा के बीच हरिद्वार से एक अवांछनीय घटना का वीडियो सोशल मीडिया पर #वायरल हो गया है। यह घटना ऋषिकुल हाईवे की बताई जा रही है, जहां एक स्कूटी सवार महिला और कुछ कांवड़ियों के बीच हल्की टक्कर… pic.twitter.com/GfUIVHKhD3
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) July 14, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)