Minor Girl Abused | Teenage Love Couple File Picture (Photo Credit: Siasat.com / WikiHow)

மே 18, சென்னை (Chennai): சென்னையில் உள்ள தாம்பரம், கூடுவாஞ்சேரி பகுதியில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், அங்கு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருடன் அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இளைஞர், பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார். நட்பாக தொடங்கிய இவர்களின் பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் இணைபிரியாத காதல் ஜோடியாக இருந்து வந்துள்ளனர்.

மருமகளே என ஆசை காண்பித்த இளைஞனின் பெற்றோர்: இவர்களின் காதல் விவகாரம் வேலை பார்க்கும் நிறுவனம் முதல் இருதரப்பு பெற்றோருக்கும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதுவும் எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால், காதலை மகிழ்ச்சியாக ஜோடி தொடர்ந்துள்ளது. இளைஞரின் பெற்றோர் தனது மகளின் காதலியை மருமகளே என்றும் ஆசையாக அழைத்து வந்துள்ளனர். இதனிடையே, பெண் திருமணம் குறித்து காதலன் மற்றும் அவரது பெற்றோரிடம் பேசி இருக்கிறார். Gunmen Shot Against Tourist in Afghanistan: சுற்றுலாப்பயணிகள் மீது துப்பாக்கிசூடு; 4 பேர் பலி., ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி.!

இளைஞர் மீது பெண் புகார்: அப்போது, பெண்ணின் சமுதாயத்தை கேட்டறிந்த இளைஞரின் பெற்றோர், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கவலையடைந்த பெண்மணி காதலனிடம் பேசியும் பலனில்லை. பின் பெற்றோரிடம் கூறி கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நேற்று இரவு 7 மணியளவில் காவல் நிலையம் வந்து புகாரை கொடுத்த பெண்மணி, உடனடி நடவடிக்கை வேண்டும் என நள்ளிரவு 12 மணிவரை அங்கேயே இருந்தார். காவல் அதிகாரிகள் புகாரின் பேரில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பெண்மணி அங்கிருந்து குடும்பத்துடன் புறப்பட்டு சென்றார்.