3D-Printed Brain Tissue (Photo Credit: @NeuroscienceNew X)

பிப்ரவரி 07, புதுடெல்லி (New Delhi): அமெரிக்காவின் விஸ்கான்சின் மாடிசன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சூ-சுன் ஜாங் மற்றும் அவரது குழுவினர், மனித மூளையை (Brain Tissue) 3D ப்ரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியுள்ளனர். இதுவே உலகின் முதல் முப்பரிமாண (First 3D-Printed) மூளை ஆகும். இந்த முப்பரிமாண மூளையானது ஹாரிசான்டல் லேயரிங் (Horizontal Layering) மற்றும் சாஃப்டர் பயோ இங்க் (Softer Bio-ink) மூலம் இந்த செயற்கை மூளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை மூளையானது மனித மூளையைப்போலவே நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் (Neurotransmitters) மற்றும் மிர்ரரிங் இன்டராக்‌ஷன் (Mirroring Interactions) ஆகியவற்றினால் தகவலை பகிர்ந்துகொள்கின்றது. Balochistan Blast: பாகிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பு.. 26 பேர் உயிரிழப்பு..!

இது மனித மூளையை போலவே வளர்ச்சியடைந்து அதன் செயல்பாடுகளோடு இயங்கும். இந்த கண்டுபிடிப்பானது நரம்பியல் வளர்ச்சியில் கோளாறு இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூளை தொடர்பான நோய்களான அல்சைமர்ஸ், பார்கின்சன்ஸ் பாதிப்படைந்தவர்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வரமாக இருக்கும். இதன் மூலம் மனித மூளையின் தோற்றத்தை போலவே மிகவும் துள்ளியமாக இருக்கும் செயற்கை மூளையை உருவாக்க முடியும். மேலும் இந்த செயற்கை மூளை உருவாக்கத்தின் மூலம் மூளை செல்களைப் பற்றியும் மூளையின் பாகங்கள் ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு செய்துகொள்கின்றன என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்ய முடியும்.