ஜனவரி 25, தொப்பூர் (Dharmapuri News): தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியில், சேலம் - பெங்களூர் (Salem Bangalore National Highway) தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் மிகவும் ஆபத்தான பகுதியாக கவனிக்கப்படுகிறது. இக்கணவாயில் வாகனங்கள் பயணம் செய்யும்போது, அவ்வப்போது ஓட்டுனர்களின் கட்டுப்பாட்டை இழந்து பெரும் விபத்துகளும் ஏற்படுகின்றன. இந்த நிலையில், நேற்று தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இரண்டு லாரிகள் மற்றும் மூன்று கார்களின் மீது மோதி விபத்திற்குள்ளானது. AIADMK Former MLA Passed Away: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கராஜ் காலமானார்; தலைமை நிர்வாகிகள், தொண்டர்கள் இரங்கல்.!
3 பேரின் கோர மரணம்: இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே கார் தீப்பிடித்து எறிந்த நிலையில், காரில் பயணம் செய்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் விவரங்கள் தற்போது வரை தெரியவில்லை. காவல்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு காயமடைந்த 10 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். நடுவழியில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெங்களூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. விபத்து தொடர்பான காட்சிகள் அங்கு இருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. பார்க்கவே நெஞ்சை பதறவைக்கும் விபத்து காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.
அரசு நிர்வாகத்தின் இரங்கல்: இவ்விபத்து குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளனர். மேலும், அரசின் சார்பில் மக்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் அறிவித்து இருக்கிறார். தொப்பூர் கணவாய் உயர்மட்ட பாலம் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த வீடியோ உங்களின் பார்வைக்கு:
— Abdul Muthaleef (@MuthaleefAbdul) January 24, 2024