ஜூலை 26, பெய்ஜிங் (World News): சீனாவில் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி ஒரு சம்பவம் நடந்துள்ளது. அது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்து வருகிறது. அதில், நபர் ஒருவர் லித்தியம் பேட்டரியை (E-Bike Battery) எடுத்துக்கொண்டு லிஃப்ட்டுக்குள் நுழைகிறார். அந்த லிப்ட்டில் அவரை தவிர வேறு யாருமில்லை. லிப்ட் (Elevator) கதவு மூடப்பட்ட அடுத்த செகண்டே, அந்த லித்தியம் பேட்டரி வெடித்து சிதறி தீப்பிடித்துவிட்டது. கதவு மூடப்பட்டதால் அந்த நபரால் வெளியே வரமுடியவில்லை. பின்னர் லிப்ட் கதவை திறந்து பார்த்தபோது, லிஃப்ட்டுக்குள்ளேயே அந்த நபர் உடல்கருகி விழுந்து கிடந்தார். Teenager Fall From Train Stairs: படியில் தொங்கியவாறு இரயில் பயணம்; தவறி விழுந்த இளைஞர்.. பதறவைக்கும் வீடியோ..!
எப்போதுமே பேட்டரி அதிகமாக வெப்பமடையும்போது,ஒரு ரசாயன சங்கிலி எதிர்வினை ஏற்படுகிறது.. அதனால், இது இன்னும் அதிக வெப்பத்தை வெளியிடுகிறது. இது பேட்டரியில் இருக்கும் எரியக்கூடிய பொருட்கள் தீப்பிடிப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகிறது. இது வெடிப்பு செயல்முறையைத் தூண்டும். எனவே, லித்தியம் பேட்டரிகளை கையாளும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவதும் மற்றும் பாதுகாப்பு பரிந்துரைகளை கடைபிடிப்பதும் அவசியம்.
எச்சரிக்கை பதிவு :-
ஒரு நபர் எலக்ட்ரிக் பைக் பேட்டரியை லிப்ட்டுக்குள் கொண்டு செல்கிறார்.
லிப்ட் மூடப்படும் போது, பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ் முழு லிப்டையும் காந்த பேட்டரியாக மாற்றுகிறது.
கவனமாக இருங்கள் மற்றும் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...🙏 pic.twitter.com/Jp2qVVd4yd
— Basheer Ahmed (@BasheerAhm49289) July 25, 2024