Chennai Rains (Photo Credit: @akarthikcs X)

செப்டம்பர் 30, சென்னை (Chennai News): உள் தமிழக பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் 30ஆம் தேதியான இன்று தமிழகத்தில் (Tamilnadu Weather Update) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை (Weather) ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. வானிலை: காலை 10 மணிவரை வெளுத்து வாங்கப்போகும் மழை; இன்று இங்கெல்லாம் கனமழை - வானிலை ஆய்வு மையம்.! 

மதியம் 1 மணிவரை 27 மாவட்டங்களில் மழை:

இந்நிலையில், மதியம் ஒரு மணி வரை கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழையும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று மதியம் 1 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த அறிவிப்பு: