ஆகஸ்ட் 18, சென்னை (Chennai News): தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, 18ஆம் தேதியான இன்று தமிழகத்தில் (Weather Update) அநேக இடத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை (Chennai RMC) ஆய்வு மையம் தனது நாளைய வானிலை (Tomorrow Weather) அறிவிப்பில் தெரிவித்து இருந்தது.
இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள்:
கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிககனமழையும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. TN Govt Bus: பௌர்ணமி கிரிவலத்துக்கு திருவண்ணாமலை போறிங்களா?.. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் அசத்தல் அறிவிப்பு.!
சென்னையில் நிலவரம்:
தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதி, குமரிக்கடல் பகுதி, தெற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல், மத்திய மேற்குவங்கக்கடல் ஆகிய பகுதிகளில் 21 ஆம் தேதி வரை சூறாவளி காற்று வீசும் என்பதால், அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
அரபிக்கடல் நிலவரம்:
அதேபோல, மத்திய மேற்கு அரபிக் கடலில் கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் கர்நாடக கடலோரப் பகுதிகள் அதனை ஓட்டிய மத்திய கிழக்கு அரவை கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மனிக்கு 55 கிலோமீட்டர் வீசு வேகத்தில் வீசும் என்பதால் அப்போது எங்களுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
காலை 10 மணிவரை 2 மாவட்டத்தில் இன்று மழை:
இன்று காலை 10 மணிவரையில் நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.