Heroic MSF Staffer Saves Passenger (Photo Credit: @punekarnews X)

மார்ச் 28, புனே (Maharashtra): நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதனாலும், ரயில் கட்டணம் குறைவாக இருப்பதனாலும் பெரு நகரங்களில் உள்ளூர் ரயில் பயன்பாட்டை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்விதம் பயன்படுத்தும் போது சிலர் அஜாக்கிரதையாக ரயில் நிற்ப்பதற்குள் கீழே இறங்குவது, ஏறுவது, வாயிலில் கூட்டமாய் நின்று கொண்டிருப்பது என அலட்சியமாக இருக்கின்றனர். Vegetable Pakoda Recipe: காய்கறிகளை வைத்து தான் பண்ணினதுனு சொன்ன நம்ப கூட மாட்டார்கள்... சுவையான காய்கறி பக்கோடா செய்வது எப்படி?.!

அந்த வகையில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், ஒரு சிசிடிவி வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், ஒரு பயணி அவசரமாக ஓடி வந்து ஓடும் ரயிலில் ஏற பார்க்கிறார். அப்போது பயணி கீழே விழுந்து ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் செல்லும் போது, பாதுகாப்பு படை வீரர் (Heroic MSF Staffer) திகம்பர் தேசாய்வால் காப்பாற்றப்படுகிறார். அவர் வேகமாக பயணியை பிடித்து இழுத்து காப்பாற்றுகிறார். புனே நிலையத்தின் பிளாட்பார்ம் எண் 3-ல் இருந்து வேகமாக வந்த ரயிலில் நசுங்கும் அபாயத்தில் இருந்த அவரை பிளாட்பாரம் நோக்கி இழுத்தார். தற்போது இந்த வீடியோ இணையம் முழுதும் வைரலாகி வருகிறது.