Muzaffarpur Sexual Harassment Case (Photo Credit: @firstbiharnews X)

ஜூன் 18, பாட்னா (Bihar News): இந்தியாவில் ஒவ்வொரு நாளுக்கும் 70 க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவணகம் தெரிவிக்கிறது. இவ்வாறான குற்றங்களுக்கு மதுபோதை, உளவியல் காரணங்கள் என பலவற்றை கூறினாலும், தனிமனித ஒழுக்கமின்மை என்பது மிகப்பெரிய சீர்கேடாக அமைந்து இருக்கிறது. இவ்வாறான துயரங்களை எதிர்கொள்ளும் பெண்களும், தங்களின் குடும்ப சூழ்நிலை, எதிர்கால வாழ்கை போன்றவற்றை காரணமாக வைத்து உண்மையை மறைப்பதால் குற்றவாளிகள் தப்பிவிடுகின்றனர். பெண்களிடம் அத்துமீறும் கயவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டாலும், அவை நிறைவேறாத வரை பெண்களை குறிவைத்து மோசடி செய்து சீரழிக்கும் கும்பலின் அவல நிலை தொடரத்தான் செய்யும் என்பது வருத்தமான உண்மையாக இருக்கிறது. அந்த வகையில், பதறவைக்கும் தகவல் ஒன்றை வெளியிடுகிறது இந்த செய்தித்தொகுப்பு.

பீகாரில் நடந்த பயங்கரம்:

பீகார் மாநிலத்தில் உள்ள முஸாபர்பூர் நகரில் செயல்பட்டு வருவதாக கூறப்பட்ட நிறுவனம் ஒன்றில் இருந்து பெண்கள் வேலைக்கு எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடம், பெண்கள் மட்டுமே நமது நிறுவனத்தின் சார்பில் வேலைக்கு எடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு நகரில் உள்ள மையத்தில் வைத்து பயிற்சி வழங்கப்படும். முதல் மாத பயிற்சிக்கு மட்டும் ரூ.20 ஆயிரம் செலவு ஆகும். TN Weather Update: மதியம் 1 மணிவரை 3 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

வேலை என விளம்பரம்:

அடுத்த மாதத்தில் இருந்து கைநிறைய சம்பளம் வாங்கலாம். மார்க்கெட்டிங் துறை பணி என்பதால், அழகான பெண்கள் மற்றும் பேச்சில் தெளிவுள்ள பெண்கள் மட்டுமே தேவை என பேசி பணிக்கு எடுத்துள்ளனர். பணிக்கான விளம்பரத்தை அவர்கள் நாறுகி (Naruki), பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பெண்களுக்கு வலைவீசி கும்பல் அவர்களை தங்களின் வலையில் வீழ்த்தி இருக்கிறது. இவ்வாறாக வேலைக்கு தயாராகி பணம் செலுத்தியோரை, கும்பல் முஸாபர்பூர் வரவழைத்துள்ளது.

ஆசைக்கு இணங்க மறுத்தால் சித்ரவதை:

அங்கு பெண்கள் 5 முதல் 6 பேர் கும்பலால் தனித்தனியேவும், கூட்டாகவும் சேர்ந்து பாலியல் பலாத்காரத்தை எதிர்கொண்டு இருக்கின்றனர். இந்த கும்பலால் தற்போது வரை 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர்களில் ஒரேயொரு பெண்மணி மட்டுமே காவல் நிலையத்தில் தனது புகாரை பதிவு செய்துள்ளார். தங்களின் இச்சைக்கு இணங்க மறுத்த பெண்களை பெல்டால் அடித்து துன்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். பின் இவர்களை வீடியோ எடுத்து வைத்து, இதுகுறித்து புகார் அளித்தால் விடியோவை வெளியிட்டு கொலை செய்திடுவோம் எனவும் மிரட்டி இருக்கின்றனர். Omni Bus Restrictions in TN: இன்று முதல் வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்கக்கூடாது - தமிழ்நாடு போக்குவரத்துத்துறை திட்டவட்டம்.! 

காவல்துறை விசாரணை:

இவர்களின் மிரட்டலுக்கு பயந்து பல பெண்கள் புகார் அளிக்காத நிலையில், இக்கும்பலிடம் சிக்கிய சாப்ரா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், முஸாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அஹியாபுர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்மணி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து பேட்டியும் அளித்து இருக்கிறார். அவர் இக்கும்பலின் வலையில் சிக்கி சீரழிந்த நிலையில், அவருக்கு கருக்கலைப்பு வரை செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி துயரம் போல பயங்கரம்:

கடத்த 2019ம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் உள்ள பண்ணை வீட்டில், 4 பேர் கொண்ட இளைஞர் கும்பலால் பல பெண்கள் சீரழிக்கப்பட்டனர். இவர்கள் முகநூலில் அறிமுகமான நபரை நம்பி ஏமார்ந்து பண்ணை வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு கும்பலால் சித்ரவதை செய்யப்பட்டு பலாத்கார துயரத்தை அனுபவித்தனர். இந்த துயரம் போன்றதொரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது. பெண்கள் இங்கு கொடுமைப்படுத்தப்பட்டதன் சில வீடியோ காட்சிகள் வெளியாகிய நிலையில், பீகாரில் நடந்த துயரத்தின் விடியோவும் வெளியாகி இருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம்:

கும்பலை சேர்ந்தவர்களின் புகைப்படங்கள்: