ஆகஸ்ட் 13, சூலூர் (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒத்தக்கல் மண்டபம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கற்பகம் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் மாணவ - மாணவியர்கள் வசதிக்காக கல்லூரி நிர்வாகம் சார்பில் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இன்று பல்லடம் பகுதியில் இருந்து மாணவ-மாணவியர்களை கல்லூரிக்கு சொந்தமான பேருந்து அழைத்து வந்துகொண்டு இருந்தது. Yellow Alert: தமிழ்நாட்டுக்கு மிககனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
15 பேர் படுகாயம், 5 பேர் கவலைக்கிடம்:
அச்சமயம், பாப்பம்பட்டி பகுதியில் உள்ள கோழிப்பண்ணை அருகில், லாரி (Lorry - College Bus Crash) ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்தது. அதிவேகத்தில் கல்லூரி பேருந்து பயணித்ததாக கூறப்படும் நிலையில், லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவிகள் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் முதற்கட்ட தகவல் தெரியவந்துள்ளது.
அதிவேகம் காரணம்:
விபத்து ஏற்பட்டதும் அங்கிருந்தவர்கள் உடனடியாக பேருந்து மற்றும் லாரியை பிரித்து, கல்லூரி பேருந்துக்குள் சிக்கியிருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர்கள் கோவை அரசு மருத்துவமனை, பிற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களின் பெற்றோர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகனத்தை இயக்கியதே விபத்திற்கு வழிவகை செய்துள்ளதும் அம்பலமானது.