Mini Bus Overturned in Jammu (Photo Credit: @vani_mehrotra X)

செப்டம்பர் 01, ஜம்மு (Jammu News): ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குஞ்ச்வாணி சௌக் (Kunjwani Chowk Accident) பகுதியில் நேற்று மினி பேருந்து ஒன்று பயணிகளுடன் வந்துகொண்டு இருந்தது. அதிவேகத்தில் பேருந்து வந்ததாக தெரியவரும் நிலையில், ஒருகட்டத்தில் அங்குள்ள பாடா ஷோரூம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தறிகெட்டு இயங்கி விபத்திற்குள்ளானது. Formula 4 Race: கார் ரேஸுல நானும் கலந்துக்கலாமா? பார்முலா 4 பந்தயப்பாதையில் பவனி வந்த நாய்.! 

ஒருவர் பலி., பலர் படுகாயம்:

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையின் எதிர்திசையில் வந்த காரின் மீது மோதியது. பின் கவிழ்ந்து மின்சார கம்பிகள் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 18 வயது கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 16 வயதான சிறுமி சைனா, 25 வயது நபர் கௌதம் சர்மா, ஆகேஷ் மோகன், 39 வயது பெண் பஞ்சாட்சரிதி, முகேஷ் சர்மா (16), சரிதா (16), நிஷா (16) உட்பட பலரும் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கி தப்பிச்சென்ற மினி பேருந்து ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகிறார்கள். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களில், இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

அதிவேகத்தில் வந்து கார், மின்சார கம்பிகளில் மோதி கவிழ்ந்த மினி பேருந்து: