Los Angeles Airport (Photo Credit: @drakeslayer100 X)

டிசம்பர் 31, லாஸ் ஏஞ்சல்ஸ் (World News): அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) விமான நிலையம், நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான விமானங்களையும், பல இலட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்டது ஆகும். இங்கிருந்து பல உலக நாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடமும் விமானம் வானில் மேலெழும்பியபடியும், கீழிறங்கியபடியும் இருக்கும். இந்நிலையில், கடந்த டிச.27 அன்று டெல்டா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஓடுபாதையில் வேகமாக சென்று மேலெழும்பியது. Sydney Welcomes 2025: புத்தாண்டு 2025 ஐ வரவேற்றது ஆஸ்திரேலியா; கண்கவர் வாணவேடிக்கை.. மக்கள் கொண்டாட்டம்.! 

அதிஷ்டவசமாக தப்பிய விமானங்கள்:

அப்போது, விமானம் மேலெழும்பவேண்டிய பகுதியை நோக்கி மற்றொரு சிறிய ரக விமானமும் வந்தது. சிறிய ரக விமானத்தின் விமானி, முன்னதாகவே தனது நிலையை கணித்து விமானத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஓடுபாதை நோக்கி வந்த சிறிய ரக விமானத்தில் கோன்சாகா பல்கலைக்கழகத்தின் (Gonzaga University) ஆண்கள் கூடைப்பந்து அணி வீரர்கள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் குறித்து விமான கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு விமானங்களும் மிகக்குறைந்த இடைவெளியில் தப்பித்துக்கொண்டன. இந்த சம்பவத்தின் அதிர்ச்சி காணொளிகள் வேலையகி வைரலாகி வருகின்றன.

நூலிலையில் இரண்டு விமானங்களும் தப்பித்துக்கொண்ட காணொளி:

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் மோதலை தவிர்த்த இரண்டு விமானங்கள்: