டிசம்பர் 31, சிட்னி (World News): உலகமே 2024ம் ஆண்டை விட்டு வெளியேறி, புத்தாண்டான 2025 க்குள் அடியெடுத்து வைக்க இறுதிக்கட்ட தயார் நிலைய அடைந்துள்ளது. பசுபிக் பெருங்கடலில் உள்ள டேங்கோ, கிரிபாட்டி தீவுகள், நியூசிலாந்து நாடுகளில் புத்தாண்டு பிறந்துவிட்ட நிலையில், ஆஸ்திரேலியாவில் தற்போது புத்தாண்டு பிறந்துள்ளது. அடுத்தடுத்து புத்தாண்டை வரவேற்க இந்தியாவும் தயார் நிலையில் இருக்கிறது. New Year 2025: புத்தாண்டை முதல் நாடாக வரவேற்ற டோங்கா, கிரிபாட்டி.. அசத்தல் கிளிக்ஸ் இதோ.!
ஆஸ்திரேலியாவில் புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலம்:
இந்நிலையில், ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில், நள்ளிரவு 12:00 மணி (இந்திய நேரப்படி 06:30) புத்தாண்டு வரவேற்கப்பட்டது. சிட்னி நகரில் உள்ள உலகப்புகழ்பெற்ற துறைமுக பாலத்தில், ஒபேரா ஹவுஸ் அருகில், மக்களின் கண்களை கவரும் வகையில் பிரம்மாண்ட வான வேடிக்கை நடைபெற்றது.
சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாட்டம்:
Sydney's fireworks on New Year's Eve pic.twitter.com/uGEJHlvr62
— Eric Kwan's Taxis Sydney 0437288833 (@eric_taxis) December 31, 2024
புகழ்பெற்ற துறைமுக பாலத்தில் வாணவேடிக்கை:
Avustralya, Sydney’deki kutlamalarla 2025’e girdi. pic.twitter.com/9NXrgBTVTk
— Yurttan Haberler (@yurttanhabercom) December 31, 2024