Bhogi (Photo Credit: @PTI_India X)

ஜனவரி 13, விசாகப்பட்டினம் (Andhra Pradesh News): உலகத்தமிழர்கள் பொங்கல் பண்டிகை, ஜனவரி 14, 2025 அன்று சிறப்பிக்கப்படவுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கொண்டாடப்படும் போகிப்பண்டிகை (Bhogi Festival 2025) ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் சிறப்பிக்கப்படும். வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், தேவை இல்லாத பொருட்களை புறக்கணித்து, அதனை தீயிலிட்டு கொளுத்துவது போகியின் முக்கிய விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனாலேயே போகிப் பண்டிகைக்கு, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழியும் அடிப்படையாக உள்ளது. அணைக்கட்டில் செல்பி எடுத்து குளியல், கொண்டாட்டம்.. நண்பர்கள் 5 பேர் நீரில் மூழ்கி பரிதாப பலி.! பெற்றோர்கள் கண்ணீர்.!

ஆந்திராவில் களைகட்டும் போகி:

ஆந்திராவில் பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர். மேலும் தீப்பந்தங்களைச் சுற்றி பக்திப் பாடல்களைப் பாடி நடனமாடி வருகின்றனர். இன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள் என்பதால் ஆங்காங்கே குளிர் காணப்படுகிறது.

ஆந்திராவில் போகி பண்டிகை கோலாகலம்: