Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 27, குகைப்பகுதி (Salem News): சேலம் மாவட்டத்தில் உள்ள இச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் பசுபதி. இவரின் மனைவி சண்முகப்பிரியா. தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தை இருக்கிறார்கள். இதனிடையே, தம்பதிகளுக்கு இடையே அவ்வப்போது கருத்து முரண் இருந்து வந்துள்ளது. இச்சிபாளையம் பகுதியில் வசித்து வந்த தமிழரசன் என்பவருக்கும், பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

கள்ளக்காதல் பழக்கம்:

இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், ஒருகட்டத்தில் இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் பசுபதிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் கள்ளக்காதல் ஜோடியை கண்டித்துள்ளார். இது தம்பதிக்கு இடையேயான மனக்கசப்பை மேலும் அதிகரிக்கவே, சண்முகப்பிரியா தனது 2 குழந்தைகளுடன் தமிழரசனின் வீட்டிற்கு சென்று குடித்தனம் நடத்தவும் தொடங்கி இருக்கிறார். சம்பவத்தன்று சண்முகப்பிரியா தனது இளைய மகன் மாறனை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். வானிலை: தமிழ்நாட்டில் கனமழை அறிவிப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

அதிர்ச்சி தகவல் அம்பலம்:

அங்கு சிறுவன் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததாக கூறி இருக்கிறார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தபோதும், தலையில் படுகாயம் காரணமாக சிறுவன் மாறன் உயிரிழந்தார். சிறுவனின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, சிறுவனின் அண்ணன், தம்பியை தமிழ் தூக்கி எறிந்தார் என கூறி இருக்கிறார்.

தலையில் படுகாயமடைந்து சோகம்:

இதனைத்தொடர்ந்து, பசுபதியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தமிழரசனை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சம்பவத்தன்று போதையில் இருந்த தமிழரசன், குழந்தை மாறன் அழுதுகொண்டு இருந்த காரணத்தால் தூக்கி வீசியதில், அவர் தலையில் காயமடைந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனால் காவல்துறையினர் தமிழரசனை கைது செய்த நிலையில், அவரை சிறையில் அடைத்தனர். மேலும், பசுபதியின் உறவினர்கள் பெண்ணிடம் இருக்கும் மற்றொரு மகனை அதிகாரிகள் சட்டபூர்வமாக மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளனர்.