ஜனவரி 24, உத்தமபாளையம் (Theni News): தேனி (Theni) மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் (Uthamapalayam), பி.டி.ஆர் காலனி பகுதியில் வசித்து வருபவர் பிரசாந்த் (வயது 34). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். தினமும் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்வது இவரின் அன்றாட வேலை ஆகும். இதனிடையே, தினமும் வசூலுக்கு சென்று வந்தபோது, அங்குள்ள அனீஸ் (வயது 40) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அனீசுக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர்.
கள்ளக்காதல் விவகாரத்தால் முன்விரோதம்:
இதனிடையே, அனீஷின் மனைவியுடன் நெருக்கத்தை ஏற்படுத்திய பிரசாந்த், கள்ளக்காதல் உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அனீஷுக்கு தெரியவரவே, அவர் கள்ளக்காதல் ஜோடிகளை கண்டித்து இருக்கிறது. இதனை பொருட்படுத்தாத கள்ளக்காதல் ஜோடி, தங்களின் உறவில் உறுதியாக இருந்து வந்துள்ளது. இதனால் அனீஸ் - பிரசாந்த் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. Chennai Metro Rail: இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி; அசத்தல் அறிவிப்பு வெளியிட்ட மெட்ரோ இரயில் நிர்வாகம்.. விபரம் உள்ளே.!
நீதிமன்ற வளாகம் முன்பு இறுதி எச்சரிக்கை:
இந்த முன்விரோத பிரச்சனை காரணமாக ஆத்திரத்தில் இருந்த அனீஸ், நேற்று காலை நேரத்தில் உத்தமபாளையம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் முன்பு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு இருந்த பிரசாந்தை, மனைவியுடன் கொண்ட தொடர்பை கைவிடுமாறு எச்சரித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே மோதல் போக்கானது உண்டாகியுள்ளது.
விரட்டி-விரட்டி சரமாரியாக வெட்டிக்கொலை:
மோதலில் உச்சகட்ட ஆத்திரத்திற்கு சென்ற அனீஸ், நீதிமன்ற வளாகம் அருகிலேயே பிரசாந்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். தப்பிக்க வெட்டுக்காயத்துடன் பிரசாந்த் அருகில் இருந்த லாட்ஜுக்குள் சென்றபோதும், அனீஸ் துரத்திச் சென்று பிரசாந்தை படுகொலை செய்தார். பின் அங்கிருந்து அவர் தலைமறைவாகினார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர், பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான அனீஷை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.
முன்னதாக கடந்த மாதத்தில் திருநெல்வேலி நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டது நடந்தது குறிப்பிடத்தக்கது.