Angalaparameshwari Goddess Temple (Photo Credit: @backiya28 X)

மார்ச் 11, சேலம் (Salem): சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனுாரில் (Veeraganur) அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது (Angalaparameshwari Goddess Temple). இக்கோவிலில், மார்ச் 8 ஆம் தேதி மயானக் கொள்ளை விழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து காடு வளைப்பு, காளி புறப்பாடு, வள்ளாளராஜன் கோட்டை இடித்து, மயான சூறை இடுதல் நிகழ்ச்சி நடந்தது. மேலும் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீரபத்திர சுவாமி, பாவடைராயன் சுவாமிகள் புஷ்ப தேர் அலங்காரத்தில், சுவேத நதிக்கு கொண்டு சென்றனர். Summer Alert: பொதுமக்களுக்கான அறிவிப்பு.. யாரும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வெளிய வர வேண்டாம்..!

தொடர்ந்து, சுவேத நதி மண்ணில் பெரியாண்டிச்சி அம்மன் சுவாமி உருவம் வடிவமைத்து, 10க்கும் மேற்பட்ட ‘கிடா’, 20க்கும் மேற்பட்ட கோழிகளை பலி கொடுத்தனர். பின்னர் பொங்கல் வைத்து, அதில் பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை விட்டனர். அந்த ரத்தம் கலந்த சாப்பாட்டை குழந்தை வரம் கேட்டு மடிப்பிச்சை எடுத்த 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அதேபோல், பல்வேறு பிரச்னைகளில் உள்ளவர்களுக்கு ரத்த சாப்பாடு வழங்கப்பட்டது. அதனை அவர்கள் விரும்பி உண்டனர். இந்த விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.