Anand Raj & Nijanand (Photo Credit: @KamadenuTamil X / YouTube)

செப்டம்பர் 12, (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம் (Udhamapalayam) பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார். இவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மகன்கள் நிஜானந்த், நிவேதன். சம்பவத்தன்று இவர்கள் இருவரும், உறவினர் ஆனந்தராஜ் என்பவருடன் மூன்று இருசக்கர வாகனத்தில் நள்ளிரவு 12 மணியளவில் தங்களது வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர்.

விபத்தில் மரணம் உறுதி:

மூவரும் கருக்கோடை கிராமத்திற்கு அருகே வந்தபோது, நிஜானந்த் ஒட்டி வந்த வாகனம் புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் பலத்த இரத்த காயத்துடன் மீட்கப்பட்ட நிஜானந்த், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. Pongal Train Booking: 3 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த பொங்கல் இரயில் முன்பதிவு டிக்கெட்டுகள்; நேரில் சென்றவர்களுக்கு ஏமாற்றம்.! 

உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்:

நண்பன் தனது கண் முன்னதாகவே உயிரிழந்து விட்டாரே என ஆனந்தராஜ் அழுது புலம்பி இருக்கிறார். தகவல் அறிந்து அவர்களின் உறவினர்களும் விரைந்தனர். இதனிடையே, ஆனந்தராஜ் இருசக்கர வாகனத்துடன் மாயமாகினார். பின் அவரை தேடிப் பார்த்தபோது, ஆனந்தராஜ் தனது நண்பர் சடலமாக கிடந்த புளிய மரத்தின் அடியிலேயே உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

நண்பனுக்காக நண்பன் உயிரை விட்ட இடத்தில் துயரம்:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், ஆனந்தராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அதிகாலை 12 மணியளவில் விபத்து நடந்த நிலையில், இரண்டு மணியளவில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு வந்த ஆனந்தராஜ், தனது நண்பர் உயிரிழந்த இடத்திலேயே தனது காலணிகளை கழற்றி விட்டு இருக்கிறார்.

2 உயிர்களை இழந்த சோகத்தில் உறவினர்கள்:

பின் அருகில் இருக்கும் மின்கம்பத்தில் ஏறி, உயர் மின் கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக் கொண்டது தெரிய வந்தது. தற்காலிக ஊழியராக மின்வாரிய துறையில் பணியாற்றிய வந்த ஆனந்தராஜ், காவல்துறை அதிகாரியின் மகனான நிஜானத் இருவரும் உறவினராக இருந்தாலும், சிறுவயதிலிருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் நட்புக்காக அவர் உயிரிழந்தது அம்பலம் ஆகியிருக்கிறது. இந்த தகவல் ஆனந்தராஜ், நிஜானந்த் ஆகியோரின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.