ஏப்ரல் 07, கோவில்பட்டி (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி, விநாயகா நகர் பகுதியில் வசித்து வருபவர் துரை (வயது 57). இவர் நிலபுரோக்கராக பணியாற்றி வருகிறார். ஏப்ரல் 02ம் தேதி எட்டயபுரத்தில் இருந்து கோவில்பட்டி நோக்கி, தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அச்சமயம் வாகனம் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த எட்டயபுரம் காவல் துறையினர், துரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

3 பேர் கைது: விசாரணையில், எட்டயபுரம், தோள்மாலைப்பட்டி கிராமத்தை சார்ந்த நாகராஜ் (வயது 43) என்பவருக்கு சொந்தமான லாரியின் உதவியுடன், கயத்தாறு பன்னீர்குளம் பகுதியை சார்ந்த கிருஷ்ணசாமியின் மகன் சிவராம் (21) என்பவரால் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. விபத்து குறித்து விசாரித்தபோது லாரியை ஏற்றி துரை கொலை செய்யப்பட்டதும், அது விபத்து போல சித்தரிக்கப்பட்டுள்ளதும் அம்பலமானது. இந்த விஷயத்தில் முக்கிய புள்ளியாக இருந்த துரையின் மருமகன் உதயகுமார் ராஜா உடையார் மற்றும் லாரி உரிமையாளர் நாகராஜ், ஓட்டுநர் சிவராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கார் வாங்கியதில் தகராறு: முக்கிய குற்றவாளியான உதயகுமார் ராஜா என்ற உடையாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிதரும் தகவலும் அம்பலமானது. அதாவது துரைக்கு மகன், மகள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பின் உதயகுமார் தனது மாமனாரின் வீட்டருகே தனியாக உள்ள வீட்டில் குடியிருந்து வந்துள்ளார். மாமாவும் - மருமகனும் நிலபுரோக்கர், கொடுக்கல்-வாங்கல் தொழில் என இருந்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் மாமனார் - மருமகன் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் துரை புதிதாக கார் ஒன்று வாங்க, மருமகன் அதனை தட்டிக்கேட்டு இருக்கிறார். Tiruppur Shocker: வாய்க்காலில் குளிக்கச்சென்ற 2 இளம்பெண் உட்பட 3 பேர் பலி; நீரின் வேகம் புரியாத விபரீதத்தால் திருப்பூரில் சோகம்.! 

ஜமீன் பரம்பரை, ஓசி சோறு வாக்குவாதத்தில் சோகம்: இதற்கு பதிலளித்த மாமனார் துரை, "நான் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை, உதவி செய்யவில்லை, கேட்டவர்கள் அனைவர்க்கும் உதவியை செய்கிறேன். எனது வீட்டு உணவைத்தான் சாப்பிடுகிறீர்கள்" என கூறினார். இந்த விஷயம் உதயகுமாரை ஓசி சோறு சாப்பிடுவர் என்ற மனநிலையில் மாமனார் பேசியதாக சிந்திக்க வைத்துள்ளது. அதிலும் ஜமீன் பரம்பரையான தன்னை மாமனார் இப்படி பேசிவிட்டாரே என ஆத்திரம் ஏற்பட்டு, வேதனையில் நாளடைவில் துரையிடம் மருமகன் பேசாமல் இருந்து வந்துள்ளார். துரையோ எவ்வித சலனமும் இன்றி சாதனமாக பேசி வந்துள்ளார்.

வார்த்தையை விதைத்தால் பழிவாங்க நடந்த பயங்கரம்: காதில் கேட்ட வார்த்தைகள் தொடர்ந்து உதயகுமாரின் மனதில் வன்மத்தை ஏற்படுத்த, மாமனாரின் கை-கால்களை முறித்து பாடம் புகட்ட எண்ணி லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் அணுகப்பட்டுள்ளனர். அவர்களும் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து ஏப்ரல் 02ம் தேதி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆனால், இவர்களின் எண்ணத்தில் வந்த திருப்புமுனையாக துரை விபத்தில் பலியாகி இருக்கிறார். இதனால் விசாரணை நடத்திய காவல் துறையினர் துரையின் மருமகன் உதயகுமார், அவருக்கு உடந்தையாக இருந்த சிவராம், நாகராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.