Victim Logeswari | Chinna Manjakuppam (Photo Credit: YouTube)

ஜனவரி 08, வராதபுரம் (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சின்னமஞ்சங்குப்பம், வரதாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் லோகேஸ்வரி (வயது 26). இவரின் கணவர் சந்தோஷ். தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இதனிடையே, நேற்று வீட்டில் இருந்த லோகேஸ்வரி, வீட்டின் தோட்டப் பகுதியில் இருந்த எலுமிச்சை மரத்தில், எலுமிச்சை பறிக்க முயற்சித்துள்ளார்.

மின்சாரம் தாக்கி சோகம்:

அப்போது, வீட்டின் மாடிக்கு சென்று, அங்கிருந்தபடி இரும்பு கம்பி கொண்டு எலுமிச்சை பறிக்க முற்பட்டதாக கூறப்படுகிறது. அச்சமயம், லோகேஸ்வரியின் கைகளில் இருந்த இரும்பு கம்பி, எதிர்பாராத விதமாக மின்சார (Electrocution Death) கம்பியின் மீது பட்டுள்ளது. இதனால் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட லோகேஸ்வரி படுகாயம் அடைந்தார். Ooty Weather Update: காஷ்மீர் போல் மாறியிருக்கும் ஊட்டி; உறைபனியில் புற்களின் ரம்மியமான காட்சி.!

Crime Scene File Pic (Photo Credit: Pixabay)
Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

குடும்பத்தினர் கண்ணீர்:

இதனைக்கண்டு அதிர்ந்துபோன அக்கம் பக்கத்தினர், லோகேஸ்வரியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில், லோகேஸ்வரி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் லோகேஸ்வரியின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையேம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரிய ஊழியர்கள் அலட்சியம் - உறவினர்கள் குற்றச்சாட்டு:

வீட்டின் அருகே தாழ்வான நிலையில் சென்ற மின்கம்பியை அகற்றக்கூறி, அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதனாலேயே லோகேஸ்வரியின் மரணம் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு முன்வைத்த உறவினர்கள், திடீர் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.