ஜூன் 09, திருச்சி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில், சட்டம் ஒழுங்கு பிரிவில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வரும் நபருக்கும், போக்குவரத்துத்துறை பிரிவில் பணியாற்றி வந்த பெண் தலைமை காவலருக்கும் இடையே சில ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன் பெண் தலைமை காவலருக்கு ஆட்டோ ஓட்டுனருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
கள்ளக்காதல் சவகாசத்தால் சோகம்: இதனால் பெண்மணி சிறப்பு உதவி ஆய்வாளருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். இந்த விஷயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்த, சில நாட்களுக்கு முன் தனது கள்ளக்காதலி புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தகவலும் கிடைத்ததுள்ளது. இதனால் அவர் ஆட்டோ ஓட்டுனரை தேடி இருக்கிறார். அச்சமயம் ஆட்டோ சேலம் சாலையில் செல்வது உறுதியானது. Mother in Law Killed: மனைவியின் கள்ளக்காதல் தகராறில், மாமியாரை குத்திக்கொன்ற இளைஞர்; பொன்னேரியில் பரபரப்பு.!
ஆட்டோ ஓட்டுனர் மீது தாக்குதல்: இதனையடுத்து, நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், சிறுகாம்பூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிய ஆட்டோ ஓட்டுநர், அவ்வழியே வந்த மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விஷயம் குறித்து ஆட்டோ ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் வாத்தலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
பணியிட மாற்றத்தை தொடர்ந்து, பணியிடைநீக்கம்: திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியின் உத்தரவின் பேரிலும் விசாரணை நடத்தப்பட, விசாரணைக்கு பின்னர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகியோர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று இவர்கள் இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
வேறொரு சம்பவம்: அதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல், கல்லுக்கூட்டம் பகுதியில் வசித்து வரும் ஹெஸ்பெலின் - கிரேஸைனி தம்பதிக்கு 4 வயதுடைய மகன் இருக்கிறார். இதனிடையே, கிரேஸைனி தனது வீட்டில் பச்சிளம் குழந்தையை வளர்க்க, அதனை தனது குழந்தை எனவும் கூறி இருக்கிறார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் விசாரணை நடந்தது. விசாரணையில், கிரேஸைனியின் தோழி தவறான பழக்கத்தால் குழந்தையை பெற்றெடுத்ததை தொடர்ந்து, சில நாட்கள் குழந்தையை கவனிக்க தோழியிடம் ஒப்படைத்து இருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, கிரேஸைனியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.