டிசம்பர் 12, அஷ்கபத் (Turkmenistan): துர்மெகிஸ்தான் நாட்டில் உள்ள அஷ்கபத் மாகாணம், கரகம் பாலைவன பகுதியில் உள்ள தர்வாசா கிராமத்திற்கு அருகே, கடந்த 1971ம் ஆண்டு ஒருங்கிணைந்த ரஷியாவுடன் துர்மெகிஸ்தான் ஒன்றிணைந்த நாடாக இருந்தபோது, ஆய்வாளர்களால் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டது.
ஆய்வாளர்களுக்கு ஷாக் கொடுத்த இயற்கை: அப்போது, அங்கிருந்து இயற்கையாக விஷவாயு வெளியேறிய நிலையில், அதனை சரி செய்ய ஆய்வாளர்கள் வாயு விரைவில் எரிந்து நின்றுவிடும் என நினைத்து தீ வைத்துள்ளனர். ஆனால், 52 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் வைத்த தீ, இன்று (The Gates of Hell) வரை எரிந்து வருகிறது.
மரணத்தின் நுழைவு வாயில்: அங்கிருக்கும் பூமிக்கடியில் இருந்து தொடர்ந்து எரிவாயு இயற்கையாக வெளியேறி வருவதால், தீ இன்று வரை அணையாமல் எரிந்து வருகிறது. முதலில் இது ஆச்சரியமாக பார்க்கப்பட்டாலும், பின்னாளில் துர்க்மெனிஸ்தான் தீ தொடர்பான செய்தி வெளியாகி, அதற்கு மரணத்தின் நுழைவு வாயில் என்ற பெயரையும் கொடுத்தது. MP Chief Minister: மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதல்வராக மோகன் யாதவ் தேர்வு: பாஜக எம்.எல்.ஏ கூட்டத்திற்கு பின் அறிவிப்பு.!
சர்வதேச சுற்றுலாத்தளம்: ற்போது சர்வதேச அளவிலான சுற்றுலாத்தலமாகவும் அம்மையம் விளங்குகிறது. உலகளவில் பலரும் நரகத்தின் வாயிலுக்கு நேரில் சென்று பார்த்து வருகின்றனர். பல ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுக்கணக்கில் முயன்றும் தீ கட்டுப்படுத்த இயலாத ஒன்றாக இருப்பதால், அரசு அதனை அணைக்கும் முயற்சியை கைவிட்டனர்.
இருவேறு கருத்துக்கள்: இந்த தீ ஏற்படுவதற்கு முன்பு, அங்கு உருவான பிரம்மாண்ட பள்ளம் தொடர்பாக உள்ளூர் மக்களிடையேயும் இருவேறு கூற்றுகள் இருக்கின்றன. ஒன்று ஆய்வாளர்களால் பள்ளம் தோண்டப்பட்டபோது, விஷவாயு வெளியேறியதாகவும், அதனை கட்டுப்படுத்த தீ வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
விஷவாயு தாக்குதல்: ஆனால், மற்றொரு தரப்பில் அங்கு பள்ளம் என்பது பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. அதில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது பலரும் விஷவாயு தாக்கி பாதிக்கப்பட்டனர். அதனை கட்டுப்படுத்த தீ வைத்தது இன்று வரை எரிகிறது என்றும் கூறுகிறார்கள்.
நீள-அகல விபரங்கள்: கடந்த 1971ல் இருந்து 52 ஆண்டுகளை கடந்து நரகத்தின் வாயிலாக உலகுக்கு அடையாளப்படுத்தப்பட்ட துர்மேனின்ஸ்தான் பாலைவன பள்ளம் 230 அடி ஆழம் 65 அடி நீளம் கொண்டது ஆகும்.
Known as “The Gates of Hell”, this 230 feet wide hole has been continuously burning since a 1971 Soviet drilling accident. pic.twitter.com/xvi7HZ9ZXG
— LetsDiscover 🌎 (@DiscoverAtoZ) December 11, 2023