Japan Earthquake (Photo Credit: @MetroUK X)

ஏப்ரல் 18, டோக்கியோ (World News): கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி ஜப்பானில் (Japan) பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியது. இந்த நிலையில், ஜப்பானின் மேற்கு மாகாணமான உவாஜிமா என்ற பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 அளவிற்கு பதிவானது. HC on Suicide Due to Love Failure: "காதல் தோல்வியால் ஆண் தற்கொலை செய்துகொண்டால், பெண்ணை கைது செய்ய முடியாது" - உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!

இந்த நிலநடுக்கம் அங்குள்ள ஷிகாகு, கியாஷூ (Shikoku island) ஆகிய இரு தீவுகளில் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன. நேற்று இரவு தொடங்கிய நிலநடுக்கம் ஆனது இன்று காலை வரை ஜப்பானில் அடுத்தடுத்து சில இடங்களில் நில அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் ஜப்பானில் இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

Nuclear plants sits on earthquake prone vulnerable as 6.4-magnitude rock Japan. pic.twitter.com/MFAJi119sD