டிசம்பர் 26, குஜராத் (Gujarat): குஜராத் மாநிலத்தில் மஹா ராஸ் (Maha Raas) திருவிழாவிற்காக அங்குள்ள துவாரகா நகரத்திற்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆகிர் இனப்பெண்கள் திரண்டுள்ளனர். அதுமட்டுமின்றி கலாச்சார முறைப்படி சிவப்பு நிறத்தில் உடையணிந்து, திருவிழாவில் பெண்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் அந்த விழாவில் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் பாரம்பரிய நடனமாடி அசத்தியுள்ளனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த "ராஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் பக்தியுடன் உண்ணாவிரதமும் மவுன விரதமும் இருந்து இதில் கலந்து கொள்வார்கள். இந்த நடனத்தைக் காண இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குவிந்தனர். இந்த பாரம்பரிய நடனமானது தற்போது உலக சாதனை படைத்துள்ளது. இந்த மாபெரும் தெய்வீக நிகழ்ச்சியில் பங்கேற்ற 37,000 அஹிராணிகளுக்கு அகில இந்திய யாதவ சமாஜத்தால் கீதாஜி புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. Orange Alert For Delhi: டெல்லியில் பனிமூட்டம்.. 2 நாட்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!
Over 37000 women from the Ahir community performed Maha Raas in Dwarka, Gujarat pic.twitter.com/v2LLpTRxxY
— Rishi Bagree (@rishibagree) December 25, 2023